பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮧ Ꮌ

கைக் கருதப்படவேண்டியவன் மாமல்லனே. காதலும் வீரமும் இரு கண்களாகக் கொண்ட மாமல்லனைத் தசரத இராமனுக்குச் சமமான மன உறுதி வாய்ந்தவனுகப் படைக்க முயன்றிருக்கிருர் ஆசிரியர்,

'இந்த உலகத்தில் செய்ய முடியாத காரியம் ஒன்று உண்டு என்ருல், அது என் தந்தையின் கட்டளையை மீறுவது தான்.நெற்றிக் கண்படைத்த சிவபெருமானே என் கண்முன் ல்ை பிரத்யட்சமாகி மகேந்திரப் பல்லவரின் கட்டளைக்கு விரோதமான ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னல் அதை ஒருநாளும் செய்யமாட்டேன்! சிவகாமிக்கு எழுதிய காதல் மடலில் மாமல்லனின் மணிவாசகம் இது. இந்த ஒலையைத் தந்திரமாகப் படிக்க நேர்ந்த சக்கரவர்த்தி, இராமனைப் பெற்ற தசரதனைவிட நான் பாக்கியசாலி' எனப் புளகாங்கித உணர்ச்சி பெறுவதும், 'இராமனைவிட நூறு மடங்கு மன உறுதி கொண்டவன் மாமல்லன்' என நற்சான்று கூறுவதும் மாமல்லனின் பாத்திரத்திற்குச் சிறப்புத் தருகின்றன.

இந்த இப் பிறவியில் இருமாதரைச் சிந்தையிலும் தொடேன்!' என்ற இராமனைப் போலவே சிவகாமியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் சிந்தையில் ஏற்காதவன் மாமல்லன். இறுதிக் கட்டத்தில் பல்லவப் பேரரசின் நன் மைக்காக மாமல்லன் பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொள்ளத்தான் வேண்டுமென்று தந்தை மகேந்திர வர்மனும் தாயார் புவன்மகாதேவியும் மந்திரி மண்டலத் தாரும் வற்புறுத்தி மன்ருடிய காரணத்தால், வேறு வழி யின்றி பல்லேக் கடித்துக் கொண்டு சம்மதம் கொடுத்து உறுதி தளர்ந்த சமயத்திலும் மாமல்லனது இதயத்திலிருந்து சிவகாமியை இறக்கிவிட முடியவில்லை! .

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட பிறகும் மாமல்லளுல் சிவகாமியை மறக்க முடியவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், சிவகாமியின் சபதத்தை நிறைவேற்று. வதற்காக நரசிம்மவர்மன் வாதாபி மீது பெரும் போர் தொடுக்கக் கிளம்பிய சமயம், பட்டத்தரசி பாண்டியன்