பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

செல்வியிடமே தன் மனக் குமுறலை வெளியிட வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. "...இன்னமும் சிவகாமியை நான் ம்றந்துவிட வில்லை. மறக்கவும் முடியவில்லை!...” எனத் தன் மனத்தைக் கீறி உணர்ச்சியைக் கொட்டுகிருன் மாமல்லன்! காதலின் சக்தி அது.

அந்தக் காலத்து அரசர்கள் நாட்டின் நன்மைக்காக என்று சொல்லிக் கொண்டு, எத்தனையோ அரசகுல மாதரை மணம் செய்து கொள்வார்களாம்! மகேந்திர வர்மனுக்குக் கூட மனைவியர் மூவர் இருந்தனராம்! புலிகேசிக்கோ ஆறு மனைவியர்! அப்படிப்பட்ட ஒரு காலத்தில் மாமல்லனே ஏக பத்தினி நாயகனாக நிலைநிறுத்த முயன்றிருக்கிருர் ஆசிரியர். சிவகாமி தன் காதலைத் தியாகம் செய்து இறைவனுக்கே தன்னைக் காணிக்கையாக்கிக் கொண்டதன் மூலம் மாமல் லனப் பாண்டிய ராஜகுமாரியுடன் ஏகபத்தினி நாயகளுக வாழ விடுகிருள் என்பதுபோலக் கதையை முடித்திருக் கிரு.ர். , -

காதலில் தோல்வி கண்டாலும் வீரத்தில் மாபெரும் வெற்றிகண்டவன் மாமல்லன்.

'யானைக் கூட்டத்துக்குச் சிங்கம் போன்றவனும் நரசிங்கப் பெருமான ஒத்தவனும் வணங்காமுடி மன்னர் மகுடத்தின் மேல் இருக்கும் சூடாமணியைப் போன்ற வனுமான நரசிம்மவர்மன் வெற்றி என்னும் பதத்தைப் புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தின்மேல் எழுதினன்' என்று கூரப் பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளதுபோல், வாதாபி வெற்றியில் மாமல்லனின் வீரம் கொடிகட்டிப் பறக்கிறது. -- - - . . . . .”

தளபதி பரஞ்சோதியின் பாத்திரம் நாவல் முழுவதிலும் நன்கு பளிச் சி டுகிறது . நான் கு பாகங்களாக வகுக்கப் பெற்றுள்ள இந்நாவலின் முதற் பாகத்துக்கே பரஞ்சோதி யாத்திரை' என மகுடம் சூட்டியுள்ளார்