பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 7

மதம் கொண்ட யானைமீது வேல் எறிந்து சிவகாமியை யும் ஆயனரையும் காப்பாற்றிய வீர இளைஞளுக அறிமுக மாகும் பரஞ்சோதி, ஒருவேளை சிவகாமியின் காதலனகி விடுவானே என்று ஐயுறும் அளவுக்கு வாசகர்களின் ஆவலைத் துண்டிவிடுகிருர் ஆசிரியர். பின்னர் பதினுலாவது அத்தியாய மான தாமரைக் குளக் காட்சியிலேதான் சிவகாமியின் உண்மைக் காதலன் இளவரசன் மாமல்லனே என்பது உறுதி யாகிறது. இந்த வீரன் பரஞ்சோதி இன்னல்களை யெல்லாம் தாண்டித் தளபதி உயர்வு பெற்று, இறுதியில் வாதாபியை அழிப்பதுவரை மாமல்லரின் உயிர்த் தோழனுக இருந்து துணை புரிகிருன். வாதாபி வெற்றியில் இவன் கண்டெடுத்த கணபதி சிலையும், சிவகாமியின் கருணைஒலேயும் இவனுடைய ஞானக் கண்களைத் திறந்து விடுகின்றன. இதன் காரணமாக, பரஞ்சோதி போர் வெறியைத் துறந்து சிறுத் தொண்ட ராகத் துறவு நிலை பெறுவது பொருத்தமாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. х

சாளுக்கிய வேந்தன் புலிகேசி கலாரசனை யற்றவன், நெஞ்சழுத்தம் கொண்டவன் என்றெல்லாம் நிலைநாட்ட முற்படும் ஆசிரியர், அவனது போர்த் திறமையையும் படை பலத்தையும் தக்கவாறு மதிப்பிடத் தவறவில்லை. தென்னகம் நோக்கிப் படையெடுத்த புலிகேசி கொள்ளிடத்தின் குறுக்கே யானைகளே நிறுத்திப் பாலம் அமைத்து, ஆற்றைக் கடந்து பாண்டியனைச் சந்தித்தான் என யானைப் பாலம்' என்னும் அத்தியாயத்தில் வர்ணிக்கப்படும் கற்பனையழகு வியக்கத் தக்கது. - _:ت - -

சிவகாமி, ஆயனச் சிற்பி, நாகநந்தி அடிகள் முதலான கற்பனைப் படைப்புகளின் கட்டுக் கோப்பு உண்மையில் இது நடந்த வரலாறுதானே என்று நம்பும்படியாகச் சுவை தருகின்றது. - . . . . "

சிவகாமி அழகு மயில்; ஆடற் கலையரசி, எத்தனையோ இன்னல்களிலும் எதிர் நீச்சல் போட்டு உத்தமப் பெண்ணின்