பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பெருமையை நிலைநாட்டிய கலைச் செல்வி; மாமல்லனே மறந்து விடும்படி மன்ருடிய மகேந்திரச் சக்கரவர்த்தியையும் வென்ருேங்கி நின்றது அவளது மன உறுதி. பாரசீகத் தூதர் முன்னுல் நடனம் ஆட முடியாது என்று புலிகேசியையே எதிர்க்கத் துணிந்தது அவளது தன்மானம்; சாட்டையடி படும் தமிழ் நாட்டு அபலைகளைக் காப்பாற்றுவதற்காக நாற் சத்தியில் நடனமாடவும் துணிந்தது அவளது தமிழ் மானம்!

மாசிலாக் கலேயைப் பழித்த புவிகேசி சாகவேண்டும்; வாதாபி நகரம் தீயில் வேகவேண்டும்' என்றது அவளது வஞ்சினம் போரினல் விளைந்த அழிவைக் கண்டதும், இனி யாவது இரத்த வெள்ளம் பெருகுவது நிற்கட்டும்!' எனத் தளபதி பரஞ்சோதிக்கு மடல் அனுப்பியது அவளது அருள் மனம், . .

சிவகாமி கலைத் தெய்வம்' என நயவஞ்சகன் நாக நந்தியே நாவாரக் கூறச் செய்துள்ளார் ஆசிரியர். சிவகாமி மனிதப் பிறவிக்குரிய அற்ப சுகங்களில் காலங்கழிக்கப் பிறந்தவளல்லள்; தெய்வீகக் கலைச் செல்வி அவள் என் றெல்லாம் மகேந்திரரின் வாய்மொழியாலும் அப்பர் சுவாமி களின் வாக்காலும் வலியுறுத்திப் பாத்திரப்பண்பை உயர்த்தி யுள்ளார் கல்கி. முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்ற தேவாரப் பாடலைத் திருநாவுக்கரசர் சிவகாமிக் காகவே இயற்றினரோ என்றுகூட எண்ணத் தோன்று கின்றது. ஆசாபாசங்களேயும் அல்லல்களையும் வென்று இறுதி யில், தலைப்பட்டாள் தங்கை தலைவன்தாளே!' என்று முத்தாய்ப்பு வைத்துப் பாத்திரப் பண்பை நிறைவு செய்திருப் வது நாவலுக்கும் முழுமை தருகிறது.

ஆயனச் சிற்பியின் மூலம் மாமல்லபுரத்தை உருவாக்கிய மகா சிற்பிக்கு ஒரு பெயரையும் வடிவத்தையும் கொடுத்து விட்டார் கல்கி. அஜந்தா வர்ண ரகசியம்' என்ற மாயச் சொற்களின் பேரில் அப்பாவி ஆயனரை ஆட்டிப் படைத்த நாகநந்தி அடிகளின் நயவஞ்சகத் திருவிளையாடல்கள் ஆசிரி

யரின் சிந்தன சக்தியைப் புலப்படுத்துகின்றன.