பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.9

மூலிகைகளின் உதவிளுல் உடம்பினை வஜ்ரமாக்கி, அதி மானுட நச்சுச் சக்தியை ஏற்றிக் கொண்ட நாகநந்தி இறுதிக் கட்டத்தில் சிவகாமியுடன் வாழவேண்டும் என்ற ஆசை யினால் உந்தப்பட்டு, மீண்டும் தன் உடலைச் சாதாரண மனித நிலைக்குக் கொண்டுவந்தான் என்ற கற்பனை மிகமிக நுட்ப மானது. சிவகாமி மீது எனக்கு ஆசையில்லே! அவளது கலையின்மீதுதான் காதல்' என்றெல்லாம் கூறிவந்த புத்த பிriவின் மனத்திலேயே கலையார்வம் வற்றிக் காதல் வேகம் பற்றியதால்தான் அவனுக்கு அழிவுகாலம் வந்தது என்பது பொருத்தமான முடிவு என்பதில் ஐயமில்லை.

சிவகாமியின் சபதத்தை மாமல்லர் நிறைவேற்று வதற்குள் ஒன்பது ஆண்டுகள் ஓடி விடுகின்றன. இந்த நீண்ட நெடுங்காலத்தில், வாதாபியில் தனித்திருந்த சிவகாமியின் நிலைபற்றித் தொடர்பான விளக்கம் இல்லை. ஏற்கெனவே அவள் அடைந்த அல்லல்களே போதும். ஆத லால் சிறையிருந்த சிவகாமி'யின் ஒன்பது ஆண்டுத் துன் பங்களை ஆசிரியர் வர்ணித்திருந்தால் வாசகர்களின் நெஞ்சம் தாங்க முடியாமற் கூடப் போகலாம் அல்லவா?

காஞ்சிக் கோட்டை, வடபெண்ணைப் பாசறை, சிற்பக் கூடம், தாமரைக் குளம், மல்லைத் துறைமுகம், திருப்பாற் கடல் ஏரி உடைப்பு, பானைத் தெப்பம், அஜந்தா குகை முதலான வர்ணனைகளெல்லாம் வளமான தமிழ்ச் சொல் லோவியங்களாக மனத்தைக் கவர்கின்றன.

209 அத்தியாயங்கள் கொண்ட மாபெரும் நாவலான 'சிவகாமியின் சபதத்தைக் கையில் ஏந்திப் படிக்கத் தொடங்கினல் கீழே வைக்கவே மனம் வராது. எத்தனை தடவை படித்தாலும் தித்திக்கும் கதைச் சுவை ததும்பும் காவியம் போன்றது சிவகாமியின் சபதம்’.

தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை தரும் தனிச்சிறப்பு வாய்ந்த இந்த வரலாற்று நாவலும், இதில் உலவும் பாத்திரங்களும் மாமல்லபுரச் சிற்பங்களைப்