பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பஸ்ஸைப் பார்த்ததில்லை. நிலமே அந்த மக்களின் தாய். அந்தத் தாய்க்குப் பணிபுரிவதே அவர்களின் வாழ்க்கை நோக்கம். அந்தப் பணியில் ஈடுபட விரும்பாதவர்கள் சிலர், சிங்கப்பூருக்கும் பிளுங்குக்கும் போய்க் கூவி வேலை செய்து பிழைத்துப் பிறகு கண்காணிகளாகப் பணம் திரட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்பியதும் உண்டு. நிலத்தைப் பண் படுத்திப் பயிரிட்டவர்களுக்கு மண்ணுசை இருந்தது; வெளி நாடு சென்று, பிறருக்கு உழைத்தவர்களுக்குப் பொன்ஞசை இருந்தது; இளைஞர்களுக்கு இயல்பான பெண்ணுசை இருந்தது; அதில் போட்டியும் இருந்தது. மண்ணுசையை மகத்தான ஜீவநதியாகவும், பொன்ைைசயையும் பெண்ணு சையையும் அதனில் வந்து கலக்கும் கிளையாறுகளாகவும் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்.

சமூகம் விரும்புவதைக் கொடுப்பதற்காக எழுதுகிறவன் எழுத்தாளனல்ல; சமூகதிலுள்ள வேதனே, இன்பம், துயரம், எழுச்சி, வீழ்ச்சி, ஆசாபாசங்கள் முதலிய உணர்வுகளுக் கெல்லாம், என்றுமழியாத இலக்கிய வடிவம் கொடுப்ப வனே உண்மையான எழுத்தாளன். சங்கரராம் உண்மை யான எழுத்தாளர்; எனெனில், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் நாட்டுக் கிராம மக்களின் வாழ்வில் இருந்த போராட்டம், அவா. பொருமை, காதல், பழி தீர்க்கும் ஆவேசம், ஊர் வம்பளப்பில் ஆர்வம், பணப்பெருமையால் வரும் ஜம்பம், கொடுமையும் நெடுமையுமான பேச்சு, போலிசைக் கண்டு அஞ்சி நடுங்கும் சுபாவம், ஒருவருக்கு ஒருவர் உதவிய போதிலும் உள்ளுறப் படர்ந்த பகைஇத்தனைக்கும் உருவம் கொடுத்து, "மண்ணுசையை ஓர் அமர காவியமாகப் படைத்திருக்கிருர் சங்கரராம். - இந்த நாவலைப் பற்றிக் கால் நூற்ருண்டுக்கு முன்பு, பெ. நா. அப்புஸ்வாமி அவர்கள், 'கலேமகளி ல் வெளியிட்ட கருத்து, என்றும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அவர் கூறுகிருர்: "காவிரி ஆற்றங்கறை மாமரத்தின் மணம் வீசுகிறது. காற்றில் தொப்புத் தொப்பென்று விழும்