பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

王恕3

தேங்காயின் ஒலி கேட்கிறது. அருவிகளின் இன்னிசை காதில் விழுகிறது. வடிகால் கரைமேல் கிடக்கிற ஈரக்களி, பிசுக்குப் பிசுக்கென ஒட்டிக்கொள்கிறது. கிராமவாசிகளின் பேச்சுக்கள் உள்ளபடி நம் செவிகளில் விழுகின்றன. வாழ்வுச் சித்திரங்கள் உண்மையாய் அமைந்து கிடக்கின்றன. இத்தகைய நாவல், சங்கரராம் எழுதிய மண்ணுசை. இது நம் நாட்டு இலக்கியம். '

பெ. ந. அப்புஸ்வாமி அவர்கள் விஞ்ஞானியாதலால் இது நம் நாட்டு இலக்கியம்’ என்ற பார்முலா”வில்சூத்திரத்தில்-தம் கருத்து அனைத்தையும் வெளியிட்டிருக் கிருர். எனவே, இந்த நாவலில் பிறநாட்டு வாழ்வின் வாடை இல்லை என்பது தெளிவு. கிராமத்திலுள்ள பல வகை மாந்தரையும் பல வகைப் பேச்சுக்களேயும் இந்த நாவல் ஊடும் பாவுமாகக் கொண்டிருந்தாலும், இங்கே நமக்குத் தெரியாதவர் இல்லை; நமக்கு விளங்காத வட்டார வழக்குகளும் இல்லை.

"மண்ணுசை” என்பது நாவல்; தொடர் கதை அல்ல. இரண்டுக்கும் வேற்றுமை உண்டு. நாவல் என்பது, ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலுள்ள வாழ்வின் முழு விளக்கம். தொடர் கதை என்பது, வாசகர்களே அந்தரத்தில் வைப்ப தற்காக-அடுத்து என்ன வருமோ என்று அவர்களின் ஆவலைத் தூண்டுவதற்காக - ஸஸ்பென்ஸ் என்ற ஒவ்வொரு நூலை அங்கங்கே தொங்க விட்டுக்கொண்டே சென்று, அந்த நூல்களே வெவ்வேறு இடங்களில் இணைத்துப் பின்னிக்கொண்டே போவது. எனவே, தொடர் கதையைப் படிப்பவர்கள் அங்கங்கே சிறிது நேரம் தொங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதல்ை தொடர் கதையில் புதிய புதிய உத்திகளுக்கு (டெக்னிக்குகளுக்கு) இடமில்லாமற் போகிறது; ஆல்ை நாவலிலோ, வகை வகையான, புதுமை புதுமையான இலக்கிய வடிவங்கள் உருப்பெற வேண்டும்; இதல்ைதான் அதை நவீனம், புதினம் என்கிருேம். நாவெல்டி (புதுமை) இல்லையென்ருல் நாவல் இல்லை.