பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

தொடர் கதைக்கு உயிர், ஸஸ்பென்ஸ்' நாவலுக்கு உயிர், வாழ்வில் நிலைத்திருக்கும் தத்துவம். அதனல்தான் தொடர் கதையை நாவலாக்கும்போது, வாசகர்களுக்கு ஆவலேத் தூண்டிய அநாவசியமான பகுதிகளே நீக்கி, அதற்கு முழு இலக்கிய வடிவம் கொடுக்கப் பல ரசாயன மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. நிற்க,

சங்கரராமின் இந்த நாவலில், இக்கால மரபுப்படி,புதிய உத்தி (டெக்னிக்) என்று சொல்லும்படியாக ஏதும் இல்லை. கதை சொல்லும் பழைமையான வழி இது. காவிரி வெள்ளத் தைப் போலவே கதை துள்ளிக்கொண்டு வேகமாக, எங்கும் தங்கு தடையில்லாமல், செல்லுகிறது; கொலையும் கோர்ட்டு வழக்குக் காட்சிகளும் சுழல்களாக வரும் இடமும் உண்டு; ஆயினும், ஆலங்கட்டி மழை"யில் ஆரம்பித்தால், வாழ்க் கையின் விசித்திர'த்தில் சென்றுதான் நிற்கிருேம்.

கதை நிகழும் இடம், வீரமங்கலம் என்ற கிராமம். இதற்கும் ரெயிலடிக்கும் பத்து மைல் தூரம். இந்தப் பத்து மைலில் காவேரியே ஒரு மைல் தூரம். ஐந்து மைல் காட்டுப் பாதை, மீதி நாலு மைல் வண்டிகள் போக்கு வரவுக்கு வசதியுள்ள ரஸ்தா.

இந்த ஊரிலே, முன்னேர் வழியாக வந்த நிலத்துக்கு உரிய குடியானவன் வேங்கடாசலம். புது விஷயங்களைக் கிரகிப்பதில் அவன் சாமர்த்தியமுள்ளவன்; ஆனல் எதையும் நீடித்துச் செய்யமாட்டான். விவசாயத்தில் புதிய புதிய தானிய வகைகளை விளைவிக்க முயலுவான். விரைவில் பயன் பெருவிட்டால், அந்த முயற்சியை அத்துடன் விட்டுவிடு வான். இதனால் அவனுக்குக் கஷ்டமும் நஷ்டமும் மிஞ்சும். ஆனல் அவனுடைய முயற்சியிலிருந்து பிறர் லாப முறை களைக் கற்றுக் கொண்டார்கள்.

ஆசிரியர் ஒரு பொன் மொழியில், வேங்கடாசலத்தின் வாழ்வை நமக்குத் தெரிவிக்கிருர்-'சிலர் எந்தக் காரியத் தைச் செய்தாலும் அது அவர்களுக்குக் கைகூடி வருகிறது.