பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其盛器

மற்றும் சிலர், எதைத் தொட்டாலும் அது நாசமாகிவிடு கிறது. முன் வகுப்பினருக்கு அநுகூலமாகச் சந்தர்ப்பங்களும் உதவி செய்கின்றன. பின் வகுப்பினர்க்குப் பிரதிகூலமாக அசந்தர்ப்பங்களும் பாழடிக்கின்றன. வேங்கடாசலத்தின் கை கொள்ளிக்கை. இந்தக் கொள்ளிக்கைக்காரனுக்கு ஊரில் கடன் ஏறுவதில் என்ன வியப்பு இருக்கிறது:

கணவனே இழந்து ஏராளமான செல்வத்துடன் அந்த ஊருக்கு வந்த மீளுட்சி, தன் தம்பி மாயாண்டியின் குடும்பத் தையும் ஊரையுமே ஆட்டிவைக்கிருள். அவள் கம்மிய தொண்டையில் ரகசியமாக, மூணு வருசத்துக்குள்ளே வேங்கடாசலம் வட்டி கடனைத் தீர்க்காட்டி, அந்த ரெட்டி அவன் சொத்தையெல்லாம் ஏலத்துக்குக் கொண்டு வந்திடு வானும், அந்த ரெட்டி ரொம்பப் பொல்லாதவளும்' என்று வம்பளக்கும் நிலையிலே வேங்கடாசலம் இருக்கிருன் ஆயினும், அந்தச் சீட்டு கிழிச்சான் கடலே'யைத் தன் புன் செய் நாற்பது ஏக்கர்களிலும் விளைவிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அவன் தன் நண்பன் மதுரை சொன்னபடி மீனுட்சியைக் கடனுக்கு அண்டுகிருன்.

மீனுட்சியிடம் அவன் கடன் வாங்கியதை அறிந்த ரெட்டியார், 'ஒரு மாதத்துக்குள் முதலும் வட்டியுமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் பிராது செய்வேன்' என்று பயமுறுத்துகிருர், ஊரிலேயே உயர்தர மான நிலம் வேங்கடாசலத்தின் நத்தைத் தோட்டம் . அதன்மேல் ரெட்டியாருக்குக் கண். இதை நினைக்கும் போதே அவன் நெஞ்சம் பதறியது. அவன் வேர்த்து விறு விறுத்துப் போய்விட்டான். ஒ நத்தைத் தோட்டமே, நத்தைத் தோட்டமே!’ என்று கலங்கினன். தலைமுறைக் கணக்காக அவன் குடும்பத்தார் பெருமையுடன் ஆண்டு வந்த அந்தத் தங்கமான நிலத்தை அவன் காலத்திலா இழப்பது? ஒரு காலும் முடியாது!

மீனுட்சி, வேங்கடாசலத்தின் கடன்களைத் தீர்த்து விட்டாள். ஆனல் அதற்குப் பதிவாக, அவனுடைய தன்