பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

செய் நிலங்களைச்சுவாதீன அடைமானத்தில் கைப்பற்றினுள். நிலங்களின் மாசூலை அவள் அதுபவிப்பாள்; அதனல் அவள் கொடுத்த கடனுக்கு வட்டி கிடையாது. ஆனல் வேங்கடா சலமோ அவன் வாரிசுதார்களோ அறுபது வருஷத்துக்குள் கடனைத் தி ரு ப் பி க் கொடாவிட்டால், நிலங்கள், மீனட்சிக்கோ அவளுடைய வாரிசுதாரர்களுக்கோ சொந்த மாகிவிடும். இவ்வளவு தாராள மனத்துடன் அவள் பேருதவி செய்தாள்! இப்படி வேங்கடாசலம் மீளுட்சியிடமும் அவ ளுடைய தம்பி மாயாண்டியிடமும் வகையாகச் சிக்கிக் கொண்டான். ஊரிலுள்ள மற்றவர்கள் ஏழைகள்; அவர்கள் அவனுடைய தாழ்ந்த நிலையைக் கண்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

- வேங்கடாசலத்தின் சொத்துக்கள் ஒவ்வொன்ருக அவனே விட்டு நீங்கின. வருஷக்கணக்காக அவனிடம் வேலை செய்த பண்ணேயாட்கள் வேறிடம் பிழைப்புத் தேடிக் கொள்ளக் கண்ணும் கண்ணிருமாக விடைபெற்றுக் கொண் டார்கள். ஒரு கறவைப் பசுவும், ஒரு ஜதை எருதும் போக, மற்ற எல்லா மாடுகளையும் விற்க வேண்டி வந்தது. அவற் றுடன், பெரிய வைக்கோற்போரும் போயிற்று. குன்று போல் குவித்திருந்த எருக் குவியல்!-எல்லாம் போனபின்பு இது எதற்கு? இனி எந்த நன்செய்க்கு எருப்போட வேண்டும்? - -

வேங்கடாசலத்துக்கு ஏற்கனவே இருந்த கீல்வாதம் பாரிசவாயுவாக முற்றியது; ஆறு மாதம் படுத்த படுக்கை யாய்க் கிடந்து ஒருவாறு தேறியும், அவனுக்கு இடுப்புச் சுவாதீனமற்றே போய்விட்டது. எவ்வகையிலும் அவனுக்கு நற்கதி ஏற்படவில்லை. ஐந்நூறு ரூபாய்க் கடன்தான் ஏறியது; ஏனெனில், ஒரு வருஷம் புன்செய் சாவியாயிற்று: மற்ருெரு வருஷம் தானியத்தின் விலை மிகவும் குறைந்தது.

.* கஷ்டப்படாமல் வாழ்வதற்குக் கொஞ்சம் நன்செய் நிலத்தை வைத்துக்கொண்டு, மீதியை விற்றுக் கடனை