பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

அடைத்துவிட, வேங்கடாசலத்தின் நண்பர்கள் மதுரையும் வீரப்பனும் எவ்வளவோ புத்திமதிகள் கூறினர்கள். அவர் கள் தன் எதிரிகள் என்றே வேங்கடாசலம் கருதினன். தன் முன்னேர் ஆண்ட நிலங்கள் தன் குடும்பத்தைவிட்டு விலக வில்லை என்ற எண்ணத்துடன் செத்தாலும் சாவானே தவிர, அவன் அவற்றை ஒரு நாளும் விற்கமாட்டான். வேங்கடா சலம் என்ருல் அதுதான்! பொணம் தின்னிப் பயக! எல்லா ரும் நம்ப சொத்தைக் கட்டிக்கப் பாக்கருங்களே ஒளிய, நம்பளுக்கு ஒதவி செய்யறவன் எவனும் தெம்படமாட் டான்' என்று அவன் சொல்லுகிருன்.

வேங்கடாசலத்தின் மனைவி அலமேலுவின் வாழ்க் கையோ, வீட்டு வேலையிலும் சாமி கும்பிடுவதி'லும் அடங்கியிருந்தது. வீட்டின் நிலை அவளுக்குத் தெரியாமல் இல்லை. ஆனல் தன் கணவன் செல்வாக்கில் ஆசையுள்ளவ ளுகையால், அவன் வாழ்வுக்குக் குறைவு வராமல் இருக்க வேண்டுமென்று அவள் எப்பொழுதும் கடவுளை வேண்டிக் கொள்வாள். -

வேங்கடாசலத்துக்குச் சொந்தக் குழந்தை இல்லை; பினங்குக்கு ஓடிப்போன நண்பன் அப்பாவுவின் ஐந்து நாள் குழந்தை வேலுவை அவன் வளர்த்து வந்தான். வேலுவுக்கு அவனே அப்பா. -

வேங்கடாசலத்தின் நண்பன் வீரப்பனுடைய மகள் வள்ளியும் வேலுவும் சிறு வயது முதல் அன்பு கொண்ட வர்கள். இந்த அன்பு, காதலாக மாறுகிறது. ஆனல் வீரப்பன் இப்போது தன் மகளை வேலுவுக்குக் கொடுப் 'பான? அவன் மனைவி லட்சுமிதான் அதற்கு ஒப்புக்கொள் வாளா? மாயாண்டியின் இளைய மகன் மல்லனுக்கு வள்ளியை மணம் செய்விக்க அவர்கள் முடிவு செய்து, திருமண நாளும் குறித்தாயிற்று. . . . . . . . . ."

ஆனல், வள்ளி இதற்கு இசையவில்லை. திருமணத் தன்று காலையில் அவள் பைத்தியம் பிடித்தவள் போல நடிக்கத் தீர்மானிக்கிருள். வள்ளியும் வேலுவும் சந்தித்துப்