பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பேசும் காட்சிகள் நம் மனத்தை உருக்குகின்றன. இயல்பான காதற் காட்சிகள் இவை; பெண்மையின் பெருமிதத்தையும் ஆண்மையின் ஆற்றலையும் இங்கே காண்கிருேம்.

பொழுது விடிந்தால் கல்யாணம். மாயாண்டி பாதி இரவுக்கு மேல் புழைக்கடைப் பக்கம் சென்ருன். எவனே அவனைக் கொன்றுவிட்டான். ஊர் முழுவதும் அமர்க்களப் படுகிறது. வேலுவின்மேல் பழி சுமந்தது. ஜில்லா கோர்ட் டில் வழக்கு நடக்கிறது.

நிலத்தை விற்க மறுத்த அதே வேங்கடாசலம் இப் பொழுது, வீரப்பா, வேலுவை எப்படிநாச்சும் காப்பாத்த வேணும். நான் என் நெலன், புலன், ஊடு, வாசல் எல்லாத் தையும் குடுத்திடறேன்' என்று கதறுகிறன். அவனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி கடுமையான வலிப்பு வருகிறது. -

வேலுவைத் தவிர வேறு யாரையும் மணம் புரிய வள்ளிக்கு விருப்பமில்லை என்பது, வீரப்பனுக்கு நன்முகத் தெரிகிறது. அவன் மனம் மாறுகிறது; என் அருமை மகளின் சுகத்தை நான் பாழாக்குவதா? என் மனைவி நினைத் தாற் போல், காசு பணம் அவ்வளவு நிரந்தரமானதா? வேங்கடாசலம் இந்தக் கதிக்கு வருவானென்று யாராவது நினைத்தார்களா? என்று தனக்குள் பேசிக்கொள்கிருன். அவனும் மதுரையும் வேலுவை விடுவிக்க வக்கீல் வைத்துப் பெருமுயற்சி செய்கிரு.ர்கள். - -

தீர்ப்பு அளிக்க வேண்டிய நாள். கோர்ட்டுக்குள் சேவகன மீறிக்கொண்டு, ஒர் இளைஞன் ஒடி வருகிருன். "எங்கப்ப&னக் கொன்னது நான்தான்!' என்று கூறி: தகப்பன்மேல் தனக்கு உண்டான வெறுப்புக்குக் காரணங் களை விரிவாகச் சொல்லுகிருன். இவன் மாயாண்டியின் மூத்த மகன் சோளன்; அத்தை மீளுட்சியின் தொந்தரவுகள் தாங்காமல் வீட்டிலிருந்து ஓடிப் போய்த் தீய வழிகளில் இறங்கியவன். - . .

வேலு விடுதலை பெற்று வருகிருன் ஆளுல் வேங்கடா சலத்தின் மகிழ்ச்சி நிலத்திருக்கவில்லை. ஊருக்குள்ளே ஒரு