பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 29

போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரண்டு சேவகர்களும் வருவ தைக் கண்ட பிச்சை, வேலு, எங்கேநாச்சும் ஒடி ஒளிஞ் சுக்கோ அந்தப் போலீசுக்காரப் பயக மறுபடியும் உன்னத் தேடிக்கிட்டு வரானுக! ஒடு!" என்கிருன்.

'மறுபடியுமா போலீசுக்காரங்க வந்துட்டாங்க! மறுபடி யுமா! மறுபடியுமா! மறுபடிஈஈஈஈ-’’ என்று கூக்குரலிடும் போதே, வேங்கடாசலத்துக்கு வலிப்பு வந்துவிட்டது. கால் களும் கைகளும் விலுக்கு விலுக்கு என்று விரைவாக உதைத்துக் கொண்டன. கண்விழிகள் மேல்இமைக்குள் இழுபட்டு அநேகமாய் மறைந்து போயின. மோவாய்க் கட்டை கோரமாக ஒருபுறம் ஒதுங்கியது. திடீரென்று அவன் உடம்பு ஒரு துள்ளுத் துள்ளியது; மறு கணத்திலே அவன் வலிப்பு நின்று விட்டது. தொண்டையில் சில விநாடி களுக்குக் கள கள வென்ற சத்தம் கேட்டது. பிறகு அவன் அசைவற்று விழுந்து விட்டான்.

பினங்குக்குச் சென்று காலமான அப்பாவு-வேலுவின் தந்தை-சாகும்போது உயில் எழுதி, வேங்கடாசலத்துக்கும் தன் மகனுக்கும் ஆறு லட்சம் ரூபாய் வைத்த செய்தியைத் தெரிவிக்கவும், வெளி நாட்டுச் சர்க்காருக்கு இவர்கள் உண்மையான வாரிசுகள் என்பதை ருஜுபடுத்தவுமே அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். ஆளுல் இதைத் தெரிந்து கொள்ளும் பொறுமை, கிராமத்தார்களிடம் இல்லையே ! - - -

மதுரை இதை வேலுவுக்கு அறிவித்ததும், அவன் குமுறு கிருன்; எத்தினி பேருக்கு ஒவகாரம் பண்ணிச்சு எத்தினி பேருக்குத் தலை கொடுத்தது! அதுக்கு இந்தக் க-கதியா! அது செத்தப்பறம் பணம் யாருக்குத் தேவை? எனக்குக் கால் துட்டு வாணும். நான் எங்கேநாச்சும் ஒடிப் போறேன்' என்கிருன். மதுரை அவனைத் தேற்றி ஆறுதல் சொல்லுகிருன். . . . . . . . .

வேலு தன் அம்மாவை உற்றுப் பார்க்கிருன். அவள் இதயம் உடைந்து விடுவதுபோல் விம்மி விம்மி அழுது