பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30

கொண்டிருக்கிருள். வள்ளி அவனையே பார்த்த வண்ணம் நிற்கிருள். அவனுடைய விழியைச் சந்தித்ததுமே அவள் பெருமூச்சுவிட்டு மூர்ச்சையாகிக் கீழே விழுகிருள். - வேலு ஓடி அவளை வாரி எடுத்து, வள்ளி! வள்ளி!' என்று அன்பு ததும்ப அழைக்கிருன். மயக்கம் தெளிந்ததும் அவள் தேம்பியவாறே, என்னை உட்டுட்டுப் போவாதே!உட்டுட்டுப் போவாதே! நீ போறப்போ என்னேயும் அளச்சுக்கிட்டு போ!' என்று கெஞ்சுகிருள். -

ஒரு முறை அந்தத் தீனமான பார்வை, அவன் மனத்தை உருக்கியது; மற்ருெரு முறை, அதன் அளவற்ற சக்தி அவனே அடக்குவது போல இருந்தது. அன்பும் தியாகமும் பொங்கி யோடும் அந்தப் பார்வையில் அவன் இரண்டொரு நிமிஷம் ஈடுபட்டு மதிமயங்கி நின்ருன். அப்பொழுது அது, இந்த வாழ்க்கையின் கருத்தை ஒருவாறு விளக்குவதுபோல அவனுக்குப் புலப்பட்டது. பிறகு தாழ்ந்த இனிமையான குரலில், ! உன்னை விட்டு, ஒரு நாளும் பிரியமாட்டேன்' என்று அவன் அவளுக்கு வாக்குறுதி கொடுத்தான்.

வேங்கடாசலம் என்ற குடியானவன் சுகப்படுவதற்குப் பிறக்கவில்லை. ஆறு லட்சம் வந்தபோது, அதைக் காதால் கேட்கக்கூட அவன் உயிருடன் இருக்கவில்லை. தான் பிறந்த வீரமங்கலத்தில் சமூகத்துடனும், பணமும் வசதியும் உள்ள வர்களுடனும், மனேவியுடனும் மகனுடனும், நண்பர்களுட னும், தான் கொண்ட மண்ணுசையுடனும், தானே தன்னுட னும் போராடிப் போராடி வீரமரணம் எய்திய பெருவீரன் அவன். வாழ்விலுள்ள சோகம் அனைத்தையும் அவனுடைய சரிதத்தில் பிழிந்து கொடுத்து விட்டார் ஆசிரியர். - மண்ணுசை, தமிழ்நாட்டுக் கிராம வாழ்வின் வர லாறு; தன் கொள்கைக்காக இறுதியளவும் போராடிய பழமையான குடியானவனின் வீரத்தை வர்ணிக்கும் காவியம்: ஆற்றலும் ஆழமும், தெளிவும் ஒட்டமும், எழிலும் இனிமையுமாகிய இலக்கியப் பண்புகள் வாய்ந்த உன்னதமான சமூக நாவல். - - -