பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பாபுவின் வாலிப உள்ளத்தில் ஒரு சலனம் ஏற்படுகிறது. ‘'என்ன! இந்தத் தெய்விகம் நிறைந்த பெண்ணை, வேறு யாரோ ஒரு சாதாரண மனிதன் அடைந்து வாழ்வதா?’’ என்ற கிளர்ச்சி. யமுளு, பாபுவைக் காட்டிலும் பத்தாண்டு மூத்தவள்.

பாபு தன் மனதுக்குள் வேண்டிக் கொண்டபடியே யமுனாவின் கல்யாணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. பாபுவும் கல்யாணத்துக்கு உடன்படவில்லை.

ரங்கண்ணு என்ற சங்கீதக் களஞ்சியத்திடம் பாபு இசைப் பயிற்சி பெறுகிருன். இசை ஞானமும் இசையைப் பற்றிய ஞானமும் விரிவடைகின்றன. அற்புதமான குரல் உடைய பாபுவுக்கு, இசையின்பால் பெருங் காதலே தோன்றி விடுகிறது.

ராஜம் படித்துப் பட்டம் பெற்று, திருமணம் செய்து கொண்டு வடக்கே போய்விடுகிருன், போவதற்குள், யமுளுவைப் பற்றிய பாபுவின் தீவிரமான எண்ணங்களைப் பார்வதிபாயிடம் சொல்லத் தவறவில்லை.

சுப்ரமணிய அய்யர் கிராமத்தில் மரிக்கவே, பார்வதி பாய் நிர்க்கதியாய் விடுகிருள். யாரோ ஒரு வயோதிகருக்கு வாழ்க்கைப்பட மறுத்ததன் காரணமாக யமுனாவுக்கும் பார்வதிபாய்க்குமிடையே பிளவு வலுப்பட்டுக் கொண்டே

பாபு, பட்டணத்தில் ஒர் இன்ஷ்யூரன்ஸ் காரியால யத்தில் வேலை ஏற்கிருன். சங்கீத சிட்சை வேறு.

ஒரு நாள், அவன் சற்றும் எதிர்பாராத விதமாய், ஜமுளு அவன் காரியாலயத்துக்கே வந்துவிடுகிருள், பட்டினி யும் வறுமையும் உருவெடுத்தாற் போல. அவளை ஓர் அைைத ஆசிரமத்தில் சேர்க்கிருன், பாபு. -

ரங்கண்ணுவின் சீடரும், பிரபல பாடகருமான பாலூர் ராமுவின் நட்பு பாபுவுக்குக் கிட்டுகிறது. பாலூர் ராமு