பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

வுக்கு வளமான இசை ஞானம் மட்டுமே உண்டு; குரல், பிரமாதமாக ஒத்துழைக்காது. கும்பகோணத்தில் இருக்கும்போது, விசுவம்பர் காணே என்ற மராத்தியப் பாடகரின் குரல் வளத்தை அனுபவித்த பாபுவுக்கு, இப்போது நெஞ்சு தவிக்கிறது: "நாமும் அவரைப் போல் குரலைப் பண்படுத்தினுல் என்ன?"

இதற்கிடையில், பாபுவுக்கு ஜூரம் வந்து விடுகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று அவனைக் காண வந்த யமுனு, அவனுக்குப் பணிவிடை புரிவதற்காக, அன்றிரவு அவன் அறையிலேயே தங்குகிருள். அவளைக் கண்டதுமே பாபுவின் உடல் நோய் மறைந்து விடுகிறது. ஆம், நீண்ட நெடு நாளாய் இருந்த உள்ளத்து நோயும் தீர்கிறது. அவனுடைய நெஞ்சக் கனலுக்கு குளிர்புனல் அமுதமாய் அமைகிருள், அவள்.

பின்னர், பாபுவின் குரலினிமையை அறிந்த யமுன, விசுவம்பர் காணேயிடம் சென்று பயிற்சி பெறவேண்டும்' என்ற அவனுடைய யோசனைக்குப் பேராதரவு அளித்து, அவனை மிகவும் உற்சாகப் படுத்துகிருள். .

வேலையை ராஜினமா செய்துவிட்டு பாபு மங்கள் வாடிக்குப் புறப்படுகிருன். யமுளு, ஸென்ட்ரலில் விடை கொடுக்கிருள். பழைய காலத்து மனிதரான வைத்தி, யமுனவை தன் குடும்பத்தவளாக அங்கீகரிக்கும் கடிதத்தை வண்டி புறப்படும்போது பாபுவிடம் கொடுக்கிருள். பாபு படித்துவிட்டு, அப்பா எவ்வளவு பெரியவர்: என்று வியப்பும் திகைப்பும் அடைகிருன்.

உணர்ச்சியால் உந்தப்பட்டுத் தன்வசமிழந்தோரின் தவிப்பைத் தெள்ளத் தெளியத் துலக்கிக் காட்டும் மனே தத்துவ சித்திரம்' என்று சுதேசமித்திரனில் விளம்பரப் படுத்தப்பட்ட இந்தப் புதினத்தின் நாயகன், பாபு:நாயகி, கிமுஇ. . . . . . . . . . . .