பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4

தி. ஜானகிராமனின் இந்த நாவலை, மற்ற நாவல் களோடு-தமிழ், ஆங்கிலம் எதுவாயினும் சரி ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. சாதாரணமாய் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கிய வரம்புகளைக் கடந்து, புதிய எல்லேகளைச் சமைக் கும் ஆற்றல் ஆசிரியருக்குக் கைவரப் பெற்ற சிறப்பு. மேலும், இது அசல் தமிழ்ப் புதினம். தமிழ் நாட்டின் தனித்தன்மை விளங்குகிற நாலைந்து நாவல்களுக்குள், மோக முள்'ளுக்குச் சிறப்பான ஓர் இடம் கட்டாயம் உண்டு. -

வாரப் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தும் கூட, ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் வியப்போ வினவோ தோன்றவேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் ஒரு வித சுதந்திரத்துடன் எழுதியிருக்கிருர், ஆசிரியர். உண்மை யில் இந்த நாவல் அத்தியாயங்களாக பகுக்கப்படவேயில்லை. உயிருள்ள கதாபாத்திரங்களே உலவவிட்டிருக்கும் ஆசிரியர், பாத்திரங்களின் இயல்புகளையும், இயல்புகளை விளக்கும் நிகழ்ச்சிகளையும் ஆற்றெழுக்குப் போல் இடையீடின்றி நிகழ்த்தியிருக்கிருர். வாசகனைப் பிரமிக்க வைக்கவேண்டு மென்ருே, தன் எழுத்து வன்மையால் அவனைத் திணறடிக்க வேண்டுமென்ருே ஜானகிராமன் முயலவே இல்லை. காலத் தாலும் இடங்களாலும் பாத்திரங்களாலும் மிகப் பரந்து விரிந்திருக்கும் இந்த நாவலில், எதிர்பாராத திருப்பங்கள் பல ஏற்படவே செய்கின்றன. ஆனால், ஓர் இடத்திலாவது, "ஏ, வாசகனே! கவனி. இப்போது உன்னை ஓர் ஆச்சரியத் தில் மூழ்கடிக்கப் போகிறேன்!” என்று கையை உயர்த்திச் சொல்லவேயில்லை. ஒர் உதாரணம்: பாபு அலுவலகத்தில் இருக்கும்போது, வேலைக்காரன் வந்து, நடுத்தர வயதைக் கடந்த மாது ஒருத்தி, அவனத் தேடி வந்திருப்பதாகத் தெரிவிக்கிருன், பாபு வெளியே வந்து பார்க்கிருன். 'யமுளு நின்று கொண்டிருந்தாள். என்ற குண்டைப் போட்டுவிட்டுத் தொடரும் என்று ஆசிரியர் எழுதி யிருக்கலாம். ஜானகிராமன் அ ப் படி ச் செய்பவர் அல்லர். பிராசீனமான இந்த முறையில் எழுதி வாசக