பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35

னுடைய அபிமானத்தைப் பெற விழைபவர் அல்லர். யமுன ஏன், எப்படி அங்கே வந்தாள்?’ என்ற நம் திகைப் புக்கு விடை கூறுமாப்போலே, பத்து நிமிஷம் நின்று பேசி விட்டே போகிருள். அப்படிப் பேசியதால் பாபுவும் நாமும் சமாதானம் அடையவே செய்கிருேம். -

ஆசிரியர், சம்பாஷணை ரூபமாகவே கதையின் பெரும் பகுதியை எழுதியிருக்கிருர். அலே அலையாகச் சம்பாஷணை கள் வரும்போது, 'வெறும் சம்பாஷணையைத் தவிர, இந்தக் கதா பாத்திரங்களுக்கு, வேறு தொழிலே இல்லையோ?” என்று தோன்றுகிறது. ஜானகிராமனின் குறையும் நிறையும் இந்த உரையாடல்கள்தான். உரையாடல்கள் மூலமே, பாத்திரங்களின் இயல்பையும் ஈடுபாட்டையும், தவிப்பை யும் விழிப்பையும் சுட்டிக் காட்டுகிருர், ஆசிரியர்.

நாவலின் கருப்பொருள் அசாதாரணமான தொன்று. பாத்திரங்களையும் அசாதாரணமான .ெ வ ற் றி யு டனே படைத்திருக்கிருர், நாவலாசிரியர். உணர்ச்சிக் கனலாய் விளங்கும் பாபு, தியாகச் சுடராய் நிற்கும் யமு ைஆகிய முக்கியபாத்திரங்களைப்போலவே நாதோபாசகர் ரங்கண்ணு, நண்பன் ராஜம் பக்கத்து வீட்டுக் கிழத்தின் இளம் மனைவி, பாலூர் ராமு, பார்வதிபாய், அண்ணன் சங்கு, கோயம் புத்துரர் போஸ்ட்மாஸ்டர், பட்டணத்து வீட்டுக்காரர், பத்மாசனி அம்மாள் ஆகிய பின்னணிப் பாத்திரங்களும் முழுமையாகவே காட்சி தருகிருர்கள்.

ஆசிரியருக்குச் சங்கீதத்தில் உள்ள ஈடுபாட்டை வெறும் உரைநடையால் சொல்லிக்காட்ட முடியாது. நல்ல கவிதை யால், ஒருக்கால், சொல்லிக் காட்ட முடியலாம். சங்கீதத் தைப் பற்றி எழுதும்போதே ஆசிரியருக்கு 'ஆனந்த பைரவி யின் தரிசனம் கிடைத்து விடுகிறது. எழுதுகோலில் ஸ்வர ப்ரஸ்தாரங்கள் புகுந்து கொள்கின்றன. நடையில் ஓர் ஆலாபனை இயற்கையாய் சஞ்சரிக்கிறது. படிக்கும்போது நம்முடைய சரீரத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் நாத