பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அலைகள் புகுந்து, நாதப் பிரும்மத்தில் லயிக்கச் செய் கின்றன. தம்புராவின் நாத வர்ணனையைப் பாருங்கள். 'அதன் துய நாதம், குறையின்றி சுருதி சேர்ந்த நாதம், காந்தாரக் கார்வையுடன் அலை அலையாக ஒன்றன்பின் ஒன்ருக எழுந்து பரவிக்கொண்டே யிருந்தது.'

"ஸ்கா...ங், ஸ்கா...ங்...என்று தம்புராவின் ஓசை கேட் கிறது.'

அரஸிகனுக்கு வெறும் இரைச்சலாகப் படும் வெறும் ஒசைகள்கூட, ஆசிரியருக்கு நயமான இசையாகக் கேட் கிறது.

வெளியே ஓயாத கார் ஹார்ன்களின் சப்தம். தா...தா, என்று சதுச்ருதி தைவதத்தில் பாடி வழி செய்து கொள் கிறது, கார். இன்னும் ஒரு கார்... பழைய காலத்து ரப்பர் ஹார்ன். பஞ்சமத்தில் கத்தி விரட்டுகிறது. பஞ்சமம் மட்டும் இல்லை. இரண்டு மூன்று ஸ்வரம் கேட்கிறது. தபநீ, தபநீ, தபநீ.பா...பா.பா...

கோதண்டபாணி மணியைத் தட்டுகிருர். ஸா ஸா என்று மேல் ஷட்ஜமம் பிடிக்கிறது. கர்ர்ர்ர் என்று கால் நிமிஷம் கூறிவிட்டு சுவர்க் கடிகாரம் மணி அடிக்கிறது. இந்தக் காரலைப் பார்த்தால், புல்லூர் அண்ணு கீழ் ஷட்ஜமம் பிடிக்கிருப் போலிருக்கிறது. பாலூர் ராமு சொல்கிருப் போல், அவருக்குச் சாராய சாரீரம். கீழே பேச மறுக்கிறது, குரல். காருகிறது. இந்தக் கடிகாரம் எந்தக் கடையில் மது குடித்ததோ?” -

நாவலில் குறிப்பிடத்தக்க சில வர்ணனைகள் இடம் பெற்றிருக்கின்றன. அப்படி வர்ணிக்கும் கட்டங்களிலும் ஜானகிராமன் தனித்தே நிற்கிரு.ர்.

கிராமத்தில் ஆற்றின் கரை, சூரியன் மறையும் வேளை, சுற்றிலும் பச்சைப் பசுமை-இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை