பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ 8 ?

கிடைத்தால் நாவலாசிரியர்களுக்குக் கன குஷி, தம் கற்பனைத் திறனேயெல்லாம், இந்த ஆற்றங்கரையை விட் டால் வேறு எங்கேதான் காட்டுவது? நாலைந்து பக்கங் களுக்கு எழுதிவிட்டுத்தான் ஒய்வார்கள். நல்லகாலமாக, மோக முள் அந்தக் குற்றத்துக்கு ஆளாகவில்லை. இரண்டு, நான்கு வாக்கியங்களிலேயே பெருஞ் செயலை சாதிக்க முடிகிறது, ஆசிரியரால். உதாரணம் :

அப்பா எதிரே வான் முகட்டில் தகதகத்த தங்க ஓடை க%ளயும் ரோஜா நிறப் பஞ்சுகளையும் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்.’

வளர்பிறையின் ஏழாம் மதியொளி, லேசாகக் குங்குமப்பூ போட்ட பாலேப் போல, தெருவில் நீலமும் மஞ்சளும் வெண்மையும் கலந்த ஒளிப் பரப்பாக விழுந் திருந்தது.'

வேறு சில :

'கிழமைகள் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண் டிருந்தன. எந்த அவசரத்தையும் சட்டை செய்யாத நடுத் தெரு எருமைகளைப் போல ஊர்ந்தன." - ... -

மல்லிகைப் பூவைவிட ஜாதிப் பூதான் ஒஸ்தி. மல்லிகைப் பூ வாசனை, சாந்திக் கல்யாண அறை வாசனை விசுகிறது. ஜாதிப் பூவில் கோவிலின் மணம், பூஜையின் மணம் வீசுகிறது.' * . . . .

கதாபாத்திரங்கள் எல்லோரும் தம் ஜாதிக்கும் தொழி லுக்கும், படிப்புக்கும் சுற்றுச் சார்புகளுக்கும் ஏற்பவே உரையாடுவது இந்த நாவலில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், கிராமியச் சொற்களும், கிராமவாசிகளின் அவலமும் ஆற்ருமையும், இன்பமும், ஈடுபாடும், உடையும் ஊனும்,

நா-9