பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

டைய இருதயத்தின் உள்ளே உள்ளே சென்று, மிகவும் ரகசியமான இடத்தில், மிக மிக நுட்பமாக அதிரும் எண்ண அலைகளையெல்லாம், ஒரு திவலேகூட விடாமல் பிடித்துத் தந்திருக்கிருர், ஆசிரியர். ஓயாமல் ஒழியாமல் பாபு சிந்திப் பதைப் பார்த்தால், அவனுக்கு எப்படிப் பைத்தியம் பிடிக் காமல் இருந்தது?’ என்ற ஆச்சரியம்கூட நமக்குத் தோன்று கிறது. விரிவும் ஆழமும் தோன்ற பாபு தன் மனத்துக் குள்ளேயே சிந்திக்கிருன், சிந்தனை இயல்பானதுதான். ஆனல், அதை அப்படியே, மனத்தில் நிகழ்கிறபடியே வடித் துக் கொடுத்தால், படிப்பவருக்குப் புரிந்துகொள்வதில் முட்டுப்பாடு தோன்றுகிறது. குறிப்பாக, காலப் புள்ளி களைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாத ஆசிரியர், வெறும் உரை ஓட்டமாக எழுதியிருப்பதால், சில சிந்தனைகள் இடப் பொருத்தமற்றவையாகத் தோன்றுகின்றன. எனினும், பாபுவின் உள்ளப் போராட்டத்தை விளக்கும் ஓர் இடத்தில் ஆசிரியர் கையாண்டிருக்கும் ஒரு சோதனை உத்தியை நாம் பாராட்டவே செய்கிருேம் : - -

யமுனா, யமுனு...என்ன பாபு...... இப்படியேதான் இருக்கப் போறியா நீ.எப்படி...இப்படித்தான்...பின்னே எப்படி இருக்கணுங்கறே...எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே...என்ன சொல்லணும்.உனக்குப் புரியலியா... புரியறது...நீ மனுவியில்லியா? மனித உண்ர்ச்சிகளே கிடையாதா?...இருக்கு...பின்னே? அதுக்காக நான் என்ன பண்றது!...பாபு, இதெல்லாம் வாண்டாம்.'

,详 . 赛。

பாபுவுக்கும் யமுளுவிக்குமிடையே தோன்றிக் கிளர்ந்து வளர்ந்த உறவுதான்-எந்தச் சக்தியாலும் தகர்க்க முடியாத உறவுதான்-நாவலின் முடிச்சு. யமுைைவப் பற்றி பாபு வின் சிந்தனையைக் கேட்போம் :

"தலையணையில் சற்று லேசாக வலதுபக்கம் சாய்ந்திருக் கிறது, யமுளுவின் தலை, மல்லாந்து படுக்கை. காலிரண்டும்