பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40

மடங்காமல் நீண்டு கிடக்கின்றன. சற்றுத் துவண்டு தளர்ந்து ஒய்வுபெறும் துவட்சி. தலைப் பின்னல் தலையணை யில் ஏறி வளைந்து பின்னல் கிடக்கிறது. எனக்கு இருபத்து நான்கு முடிந்து விட்டது. இவளுக்கு முப்பத்து ஐந்து நடந்து கொண்டிருக்கும். '

என்ருலும், யமுளு அவனுக்காகவே பிறந்தவள். அவளே அடைவதால் தோன்றக் கூடிய இன்னல்களைக் கண்டு, "நான் அழமாட்டேன். நீயும் மனசிருந்தால் அழாமலிருக்க முடியும்’ என்கிருன், பாபு.

நாலைந்து மாசமாக வெவ்வேறு ஜோடிகளிலிருந்து பொறுக்கின இரண்டு செருப்பைப் போட்டுக்கொண்டு நடக்கிருப் போல் இருந்த பாபு, ஒரு நாள், தன் உள்ளத் துடிப்பை அவளுக்கு உணர்த்தியே விடுகிருன்.

'இப்படியெல்லாம் எங்கிட்டப் பேச எப்படி துணிஞ்சுது உனக்கு?...என்னிடம் யாரும் இதுவரை இந்தமாதிரி பேசின. தில்லை என்று முதலில் கேட்கிருள், யமுனு. ஆனல், கடைசியில், அவனுடைய பிடிவாதம், பிடிவாதத்தின் ஆழம், அந்த ஆழத்தில் தன்னுடைய ஸ்தானம், அந்த ஸ்தானத்தில் தன் சான்னியத்தின் இன்றியம்ையாமைஅதை உணர்ந்து, 'பாபு, உன் திருப்திதான் என் திருப்தி. உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம் என்று கூறி, அவனில் தன்னையே கரைத்துக் கொள்கிருள்.

இந்த இரு தூய உள்ளங்களின் அலெளகிக ஆளுல், தவிர்க்க இயலாத ஒன்றிப்புக்கு, சம்பந்தப்பட்ட பெரியவர் களின் ஒப்புதலேப் பெற்றுத் தருவது ஆசிரியரின் கடமை யாகிறது. இல்லையெனில், விளக்கம் பெறவந்த கரு, சிதைந்து தோற்றுப் போகும். எனவே, பார்வதிபாயை இப்படிப் பேச வைத்திருக்கிருர், ஆசிரியர். -

ஆன இந்த விஷயம் அவ்வளவா ஒத்துக்க மாட்டாங் கன்னு சொல்லிச்சு, ராஜம், வாஸ்தவம்தான்...ஆன.