பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 l

வந்து...எனக்கென்ன?...நம்ம தேசத்திலேயே இந்தப்பழக்கம் இல்லாம இல்லெ.நான் யாரு வேண்டாம்ளுே, சரி யில்லேன்னே சொல்றதுக்கு? அப்படிச் சரியில்லேன்னு நான் நினைக்கவும் இல்லே. எல்லாரும் சந்தோஷமா இருக்குறதுக்குத்தான் பிறந்திருக்கோம்.'

இறுதியில் பாபுவின் தந்தையான வைத்தி யமுளுவுக்கு ஒரு கடிதம் எழுதுகிருர். கடிதத்தின் ஆரம்பமே, ரீமதி யமுளுவுக்கு அநேக ஆசீர்வாதம்' என்பதுதான். தொடர்ந்து, ...டிஸம்பர் கடைசியிலோ பொங்கலுக்கோ லீவு விட்டால் நீ இங்கு வந்து இருந்துவிட்டுப் போகவும்...... எனக்கு வயசாகிக்கொண்டே போகிறது. யாராவது அருகில் இருந் தால் தேவலே போல் இருக்கிறது என்று குறிப்பிடுகிருர், வைத்தி, குடும்பத்தின் அரசர். அரசரின் ஆணையை மற்ற வர்கள் மீறமுடியாது' என்பது அங்கே தொனிப் பொருள்.

料 - 泳

இலைமறை காயாகத் தெரிவிக்கவேண்டிய ஒரு செய் தியை, சமிக்ஞை மூலமே காட்டி மகத்தான வெற்றி அடைந் திருக்கிருர், ஆசிரியர். யமுளுவுக்காகத் தவிக்கிருன், பாபு. 'பத்து வருஷம் என்ன? அதுக்கும் முன்னலேயே பிடித்து அடிக்கிற ஜூரம் இது. இரவு வேளை. தனிமையில் பாபுவும் யமுனாவும், யமுனாவுக்கோ பாபுவைத் தவிர வேறு எந்த உற்றமும் இல்லாத நெகிழ்ந்த நிலை. இப்போது, நாம், பொதுவாக என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்போமோ, அது நடந்தே விடுகிறது.

ஜானகிராமன் சொல்வதைக் கேளுங்கள் : 'உலகெல்லாம் துரங்குவது போலிருந்தது.

இங்கு, விழிப்பின் மடியில் உணர்வு துள்ளிக் கொண் டிருந்தது. உலகத்தின் மலைவெளிகளில் உள்ளம் ஏறித் தனிமையின் ஆட்சியை அருந்திக் கொண்டிருந்தது. குகை யும் சிகரங்களும் நிறைந்த மலைவெளியின் தனிமையில்