பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

ஆழ்ந்த மறதியும் தன்மயமும் தோன்றுகின்றன. உலகில் காணுத அருவிகளில் கண்ணும் உள்ளமும் நனகின்றன.'

பொழுது புலர்கிறது.

'யமுளு எழுந்துவிட்டாள். அருகே வந்து நின்ருள்; அவன் கையைப் பிடித்தாள்.

திருப்திதானே?" இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது?

"இதுக்குத்தானே?

பாபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. இதுக்குத்தாளு? என்று அவனும் கேட்டுக் கொள்கிருன். தலே கவிழ்கிருன். அவள் மெல்ல நகைக்கிருள். அந்தப் புன்னகையில்...அம்பு பாய்ந்த உயிரின் சிரிப்பு ஒளிர்ந்தது. நிலைத்து நின்ற விண்மீன்கள் பெயர்ந்து உதிர்ந்த குலைவு கிடந்தது.'

யமுளுவை ஒரு தியாகியாகக் கூறப்பட்டிருக்கிறது, நாவலில், நாவலின் தொய்வான பகுதி இதுதான். கதையின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வெகு அழுத்தமாக கூறியிருக் கும் ஆசிரியர், இந்த இடத்தில் சளைத்து விட்டார் என்று தான் எனக்குப் படுகிறது. பாபுவிடம் தன்னையே ஒப்படைத் தது, யமுனாவின் தியாக சிந்தைக்குப் பதிலாக, சமய சந்தர்ப்ப நெருக்கடிக்கு ஏற்ப அவள் வளைந்து கொடுத்து விட்டாள் என்ற எண்ணத்தையே உண்டாக்குகிறது. பாபு வுக்குப் பணியாமல் அவள் வேறு என்ன செய்திருக்க முடியும், அவள் அப்போதிருந்த நிலையில் சோக நதியில் மிதந்து கொண்டிருந்த யமுனாவுக்கு, பாபு ஒரு துரும்பு. அவள் பற்றிக்கொள்ளத் தக்க துரும்பாக அமைந்தது பாபுவின் நல்லூழேயாகும். - -