பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3

நாவலின் இடைப் பகுதி வரை, வாயில் வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் காலத்தைக் கழிக்கும் கும்பகோணத்து ஜனங்களைப் போல அவசரமில்லாமல் செல்லும் கதை, பிற்பகுதியில், பரக்கப் பரக்கச் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸைப் பிடிக்க ஒடும் பட்டணத்து ஜனங்களைப்போல விரைந்து செல்கிறது.

நாவலில் குறிப்பிடத்தக்க இரண்டு பிழைகள் உள்ளன. ஒன்று: ஒரு அழகு, ஒரு இல்லம், ஒரு உள்ளம் என்பன ஒர் அழகு, ஓர் இல்லம், ஒர் உள்ளம் என்று அவை இருக்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியக் கூற்ருக வரும் இடங்களி லேனும் இத்தகைய இலக்கண வழு ஏற்படாமல் இருக்க வேண்டும். . .

மற்றது: பத்யம், வைத்யம், பட்ணம், சத்யம் என்பன. இவை, பத்தியம், வைத்தியம், பட்டணம், சத்தியம் என்றிருக்க வேண்டும். வடசொற்களைத் தமிழ்ப் படுத்துவதற்கு சில விதிமுறைகள் உண்டு.

霧 爱

அணைக்கரை பஸ் ஆனையடியைக் கடந்துவந்து, டவுன் ஹைஸ்கூல் வாசலையும் கடந்து, நாற்சந்தியையும் கடந்து போயிற்று' என்ற வாக்கியத்துடன் 18-12-55 சுதேச மித்திரன் வாரப் பதிப்பில் தொடங்கிய இந்த நாவல், ஐப்பசிக் காற்று ஜில்லென்று வீசியது என்ற வாக்கியத் துடன் 23-12-56-ல் நிறைவெய்தியது. பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் இல்லாத வாசகர்கள் இதைப் படிக்கத் தவறினாலும், எல்லா எழுத்தாளர்களும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல்.

பாபு மங்கள்.வாடிக்குப் புறப்படுகிறன். லென்ட்ரலில் யமுன வழியனுப்புகிருள். அவள் இளமை மறைவது