பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4

போலிருந்தது. வெண்கலச் சிலைபோல் அவள் அசைவற்று நின்ற மோகத்தைக் காலடியில் மிதிப்பதுபோல் பாபு வுக்குப் படுகிறது. -

"பூமி வானத் தொட்டது; வானம் பூமியைத் தொட்டது.'

அதற்கும் அப்பால் ஒரு காட்சி என் கண்களுக்குப் படுகிறது. -

டிஸம்பர் வீவு வருகிறது. யமுன, கூடைப் பழங்க ளுடன் பாபநாசத்திற்கு வருகிருள். வீட்டு வாசலில் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த வைத்தி, எதிரே நிற்கும் ஜப தேவதையைக் கண்டு பரவசப்படுகிரு.ர். ‘அடியே, உன் நாட்டுப் பெண்’ என்று உட்புறம் நோக்கிக் கூவுகிருர், பாபுவின் தாய் ஆலத்தி சுற்றி அவளை உள்ளே அழைத்துப் போகிருள். சில ஆண்டுகள் சென்று ஒரு மகா கலைஞனக பாபு திரும்பி வருகிருன். சங்கீதத்தைத் தவிர வேறு சிந்தனையில்லை. வேறு நினைவு எழுந்தபோது, வித்யாரண்யர் பாமதியைப் பார்த்தாற்போல, யமுனவைப் பார்க்கிருன். அழகு இருந்த இடமா, அது? மூப்படைந்த உடலில், மூப்பிலா ஆன்மாவின் அற்புதச் சுடரொளி மட்டுமே நின்று நிலவுகிறது. -

ஆம், மோக முள் முள்ளாகக் குத்தவில்லை; மாருக, நம்மை அதன்பால் மோகமடையும்படிதான் செய்கிறது.