பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதியின்

குறிஞ்சி மலர்

வசுமதி ராமசுவாமி

சிறுகதை அமைப்பிலே, வாழ்க்கையில் அவ்வப்பொழுது நடக்கும் சிறுசிறு சம்பவங்களைக் கருவூலமாக அமைத்து எழுதுகின்ருேம். அதில்வரும் கதாபாத்திரங்களுக்கு, ஒரு ஆரம்பமும், முடிவும் இல்லை. எனவே, ஆழ்ந்து, படிக் கவோ, படித்து உணரவோ தேவையான ஆழமும், சுவை யும் இருப்பதில்லை. ஆனால் நாவல்கள் படிப்பது தனிப்பட்ட ஒரு இன்பம் மட்டுமல்ல; அறிவுக்கும்விருந்தாக அமைகிறது. ஒரு நல்ல நாவலைப் படிக்கும்பொழுது, வாழ்க்கையோடு ஒட்டிய அந்தச் சம்பவங்களும், இலட்சிய கதாநாயகன், கதாநாயகியின் குணச் சித்தரங்களையும், தேனினும் இனிய தமிழில், அருவிபோன்ற நடையில், எழுதிவிட்டால், ஊண் உறக்கமின்றி, பிரித்த புத்தகத்தை மடக்க மனமின்றி அதில் அமிழ்ந்து விடுகிருேம். -

ஆனால், படைக்கப்படும் எல்லா நாவல்களுமே, பல சிறந்த அம்சங்களின் கோர்வையாக அமைந்துவிடுவதில்லை. அதில் எத்தனை எத்தனையோ குறைபாடுகள்? வேண்டாத வர்ணனைப் பொருத்த மற்ற சம்பவங்கள், கருத்தில்லாத, அர்த்தமற்ற சொற்கள், முரண்பாடான குணச்சித்திரம்,