பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷46

இப்படி எந்த ஒரு குறையாவது, ஒரு நாவலிலே புகுந்து விட்டால், எழுத்தாளருக்கு மட்டும் அதைப் படிப்பதில் குறை தெரியும் என்று நினைக்க வேண்டாம். அதைவிட வாசகர்கள் அதன் குறைபாடுகளை நன்ருக அறிவார்கள். சொல்வதுண்டு; மெக்காலேயின் புத்தக விமரிசனம் அந்தப் புத்தகத்தைவிட சுவையாக இருக்கிறதென்று, மக்கள் விரும் பிப் ப டி ப் பார்க ள ம். எனவே, ஒரு நாவலாசிரியரின் பொறுப்பு மகத்தானது. அந்த நாவலுக்குத் தேவையான பலதரப்பட்ட அம்சங்களை அளந்து, அளந்து கையாள வேண்டும். .

மனிதன் இன்று இருக்கிருன் நாளே மறைகிருன். ஆனல் நல்ல இலக்கியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்பவை. கடந்த, நிகழ்கின்ற, வரப்போகின்ற சமுதாயங்களை இணைக் கும்போது, சீரிய, கொள்கைகளே புகுத்தி, உயரிய கருத்து களேத் தொகுத்து, அதையும், வெறும் பிரசாரமாக இல்லா மல்-கலையுணர்வுடன் அமைப்பது அவசியமாகிறது, அப்படிப் பார்க்கும்போது, அவ்வப்பொழுது மேலெழுந்தவாரியாக தோன்றி மறையும் நவீனங்கள், காலம் என்ற அலைகடலில், சிறிது தூரம் சென்று அழுந்தி விடுகின்றன.

மேற்சொன்ன இந்தச் சிறந்த அம்சங்களைக் கொண்டு, உருவாக்கப்படும் மாபெரும் நாவல்-அதைக் காவியம் என்றுகூட சொல்லலாம்-ஆழ்கடலில், காலத்தை வென்று ஒளிவீசும் முத்துச் சிப்பியைப்போல் பிரகாசிக்கிறது. .

இப்படி முழுமையான பூர்ணமான காவிய வரிசையில் இடம்பெறத் தகுதியான நாவல்தான் குறிஞ்சி மலர்' கல்கி ப் பத்திரிகையில் வாரந்தோறும் தொடர் கதையாக வரும்பொழுது பல்லாயிரக் கணக்கான மக்கள் படித்து மகிழ்ந்தார்கள். பிறகு, புத்தக வடிவிலே, அதைப் படிக் கும்பொழுது, அடுத்த சுவையான பகுதியைப் படிக்க, ஒரு வாரம் காத்திருக்கத் தேவையில்லை. ஒரே மூச்சில் படித்து விடலாம் என்று களிக்கும் அளவுக்கு, உயர்ந்து நிற்கிறது.