பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 47

கதையைச் சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்:

பேராசிரியர் அழகிய சிற்றம்பலம், தன்குடும்பத்தை விட்டு, அகாலத்தில் மறைந்து விடுகிருர். அவருடைய எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கம், இலக்கிய அறிவு, அருங் குணம், சிந்தையும், செயலும் ஒன்ருக இருக்கும் பண்பாடு இவை அனைத்தும் கதாநாயகி பூரணிக்குப் பின்னணியாக அமைந்திருக்கிறது. பூரணி, பேராசிரியரின் தலைப்பெண் ணுகப் பிறக்கிருள். தமிழ்க் காவியத்திலே அவர் கண்ட பெண்களில் ஒருவளாகத் தன் மகள் வாழப்போகிருள் என்று எண்ணித் தன் மகளுக்குப் பூரணி என்று பெயரிடுகிருர். தந்தையின் புத்தகங்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், கையில் ஏழரை ரூபாய், இந்தச் செல்வச் செழிப்பில், பூரணி,இரண்டு தம்பிகளையும்,ஒரு குழந்தைத் தங்கையும் வளர்த்து, ஆளாக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை ஆரம்பிக்கிருள். சாலை விபத்தொன்றில் சிக்கியதின் மூல மாக, பெருந்தன்மை வாய்ந்த செல்வச் சீமாட்டி மங்க ளேசுவரி அம்மாளின் பேராதரவு கிடைக்கிறது.அந்த அம்மா ளின் உதவியால், மங்கையர் சங்கத்தில் தமிழாசிரியை வேலை கிடைக்கிறது. தந்தையின் இலக்கியங்களே மலிவுப் பதிப்பாக வெளியிடும் நோக்கத்துடன் மீளுட்சி அச்சகத்தின் தொடர்பு ஏற்படுகிறது. அச்சகத்தைச் சார்ந்த அரவிந் தனின் சந்திப்பு, அவள் வாழ்க்கைக்கு மெருகூட்டுகிறது. குற்றமற்ற தமிழ் இலக்கியத்தின் கதாநாயகனின் வீரமும், நேர்மையும், அறிவும் நிறைந்த அரவிந்தன், பூரணிக்காக படைக்கப்பட்ட அரவிந்தன், புத்தக வெளியீட்டின் காரண மாக, அடிக்கடி பூரணியைச் சந்திக்க நேரிடுகிறது. ஒவ் வொரு சந்திப்பிலும், ஒருவருக்கொருவர் அன்பு வளர்வது மட்டும் அல்ல, மதிப்பும், தெய்வீகக் காதலும் வளருகிறது. ஒரு சமயம், குடில் வாழ் மக்கள், இயற்கையின் சீற்றத்தால் கஷ்டப்படும்போது, அதற்குப் பொருள் ஈட்டும் முயற்சியில் மங்களேசுவரி அம்மாளும், அரவிந்தனும், பூரணியை இலக் கியப் பிரசங்கம் செய்யுமாறு தூண்டுகிறர்கள். உணர்ச்சி