பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

அனவரும் அங்கு சென்றிருக்கிருர்கள். பூரணி மட்டும் அரவிந்தன் அருகில் இருக்கிருள். திடீரென்று அரவிந் தனுக்குக் காய்ச்சல் அதிகமாகி ஜன்னி கண்டு விடுகிறது. மங்களேசுவரி அம்மாள், பூரணி, நீ வெற்றி பெற்று விட் டாய் என்று முழக்கிக் கொண்டு வருகிருள். பூரணியைப் பாராட்ட, மாலையுடன் ஒரு பெரிய ஊர்வலம் வருகிறது. அரவிந்தன் அறையிலிருந்து பூரணியின் உள்ளத்தைப் பிளக்கும் அலறல் எதிரொலிக்கிறது. கூட்டம் மெளனமாக ஆகி விடுகிறது. அரவிந்தன் தெய்வமாக ஆகிவிடுகிருன்.

கலிப்பகையை, மனதில் கணவகை வரித்து, போரில் மாண்ட அந்த வீரனின் வீர மனேவியாகத் துறவு பூண்ட திலக வதியைப் பின்பற்றுகிருள் பூரணி.

இதுதான் கதையின் சுருக்கம்.

இனி நாவலின் தனி அங்கங்களைப் பார்ப்போம்.

கதை அமைப்பை நோக்கும்போது, பழைமையான உரத்திலே மலர்ந்த மணமுள்ள மலராகத்தான் அமைந்திருக் கிறது. நம் சங்க இலக்கியங்களிலும், தமிழ் காவியங் களிலும் இருக்கும் உயர்பண்புகளே அடிப்படையாகக் கொண்டது கதையமைப்பு. இது தமிழ் மொழியில், தனக் கென்று ஏற்பட்ட ஒரு தனிச் சிறப்பு. ஏறக்குறைய ஆசிரியர், திலகவதியின் தெய்வீக வாழ்க்கையைக் கருவூலமாகக் கொண்டு, காலத்திற்கு ஏற்ப மாற்றம் கொடுத்து எழுதி யிருக்கிருர். கதாநாயகன், நாயகி குணங்களில் குறைபாடு களுடன்கூட சுவையுள்ள நாவல் எழுதிவிடலாம். அது இயற்கையாகக்கூட இருக்கும். ஆனல் கதாநாயகன், நாயகியின் உயர்ந்த இலட்சியம், சிறந்த குறிக்கோள், எந்தத் துன்பத்திலும், தாழ்ந்து போகாத நேர்மையில் வழுவாத தீரம், இவைகளே ஆசிரியர் மிக மிகக் கவனத்துடன் கையாண்டிருக்கிருர், அவர்களுடைய அன்ருட வாழ்க்கை யின் துய்மை, அவர்கள் அறிவிலே முதிர்ச்சி, பேச்சிலே பண்பு, பொதுத் தொண்டிலே நேர்மை, தமிழ் இலக்கியத்