பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

திலே ரசனை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல், அவர்கள் உள்ளத்தால் மட்டும் ஒன்றுபட்ட காதல், அத் துடன் கதாநாயகன், அமரத்வம் அடைந்ததுவரை ஆசிரியர் வெகு அழகாக, மென்மையாகக் கையாண்டிருக்கிரு.ர். இதில் ஆசிரியருக்குக் கிடைத்தது மாபெரும் வெற்றி. நமக்குக் கிடைத்தது பெரும் பயன்.

அடுத்தபடியாக, கதைக்கு நிலைக்களன்கள், சங்கம் வளர்த்த, தமிழ் வளர்த்த, மாமதுரை, தெய்வமணம் கமழும் திருப்பரங்குன்றம், இயற்கையன்னே கொலு வீற்றி ருக்கும் கொடைக்கானல், தமிழ் நாட்டிலிருந்து நீண்ட தொலைவு சென்று, வாழ்ந்து, தமிழுக்காக உயிரைக் கொடுக் கும் இலங்கை, கலைகளுக்கிருப்பிடமான கல்கத்தா நகரம் ஆகிய இடங்களும் இந்த நாவலுக்குத் துணை நிலைக்களன் களாக அமைகின்றன. வர்ணனைக்கோர் சட்டதிட்டம் உண்டு ஆசிரியர் இந்த இடங்களைப் பற்றி வெகு அழகாக, சுவையாக அலுப்புத் தட்டாமல் சித்தரிக்கிருர்,

கதாபாத்திரங்களைப் பார்க்கும்போது ஆசிரியருக்கு அமோகமான வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் நாட்டில் சீலவதிகளாக வாழ்ந்த ஒளவையாரின் கல்வி யறிவும், மணிமேகலையின் ஞானமும், சோதிப் பிழம்பான கண்ண்கியின் வீரமும், பக்தி வடிவாக வாழ்ந்த காரைக்கால் அம்மையாரின் பக்தியும், கன்னிகையாக வாழ்ந்து, உலக இன்பத்தைத் துறந்த திலகவதியின் தியாகமும், பூரணமாகச் சேர்ந்து உருப்பெற்ற கதாபாத்திரம்தான் பூரணி, மிக மிக பொருத்தமான பெயர். நேர்மை, வாய்மை, தூய்மை, இந்த வார்த்தைகளுக்குப் பொருளாக விளங்குகிருன் அரவிந் தன். பூரணியின் அருங்குணத்திற்கும், வறுமையிலும் செம் மையாக வாழ்ந்த அவளுடைய உயர்ந்த நோக்கத்திற்கும் முன் ஆதாரமாக நினைவில் மட்டும் தோன்றும்படி சித்தரிக் கப்பட்டுள்ள அழகிய சிற்றம்பலம், பூரணியின் குணச்சித்தி ரத்திற்கு மெருகூட்டுவதுபோல், கதையில் வரும் பெருந் தன்மை வாய்ந்த மங்களேசுவரி அம்மாள். நியாய புத்தி