பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 I

யும், நிலையில்லாத, ஆனல் கபடமற்ற மனமும் கொண்ட முருகானந்தம், வளமான இளமையோடு, துருதுரு வென்று சுற்றிவரும் வசந்தா, இப்படி எத்தனையோ இரத்தினங்களைத் தேர்ந்த பொற்கொல்லர் சேர்த்தமைப்பது போல், கதா பாத்திரங்களை அமைத்திருக்கிருர் ஆசிரியர்.

ஒரு இலக்கிய படைப்பைப் படைக்கும்பொழுது, ஒரு ஆழ்ந்த கருத்தைத் தேடுகிறது வாசகர்கள் மனம். கதை யிலே ஒரு கருத்து, ஒரு நிறை இல்லாவிட்டால், நாவலா யிருந்தாலும், நாடகமாயிருந்தாலும் ஏன் சிறுகதையாக இருந்தாலும்கூட, வெறும் சொற்கள் நிறைந்த ஒரு அச்சுக் கோர்வையாகத்தான் இருக்கும். இந்த நாவலிலே, மணி தப் பண்பு காப்பாற்றப் படவேண்டும்; பொருளை நிறைப் பதற்காக, அக்கிரமத்தையும், அநீதியையும் செய்யக் கூடாது. அப்படி செய்பவன் மனிதருக இல்லாமல் மிருகமாக இருக்கிருன் என்பதை அழகிய சிற்றம்பலம் ஆரம்பத்திலேயே சொல்கிருர். ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்று, சில நாவல்களில், இரண்டு மூன்று அத்தியாயங்கள் பெரிய பிரசங்கமாக எழுதிவிடுவார்கள். அது ஆசிரியருக்கு வெற்றியை அளிக்காதது மட்டுமல்ல, தோல்வியையும் அளிக்கும். குறிஞ்சி மலர் ஆசிரியர் ஒவ் வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும், அந்தந்த இடத் திற்கு ஏற்றபடி அழகிய கருத்துக்களை வெளியிடுகிரு.ர். நாவலில் ஆங்காங்கு, கருத்தாழமுள்ள வசனங்கள் நிரம்ப உள்ளன. ; , -

'முள்ளோடு பிறக்கிற செடிக்கு, அந்த முள்ளே பாது காப்பு மாதிரி, இப்போது எனக்கிருக்கின்ற பாதுகாப்பு என் கவலைகள் மட்டும்தான்!” என்கிருள் பூரணி. கருத்து நம் சிந் தனையைத் தூண்டுகிறது. துன்பத்திலே பிறந்து, துன்பத் திலே வளர்கின்ற மக்களுக்கு, அந்தத் துன்பங்களே துணை யாக நிற்கின்றன. மலை போன்ற சுமையை மனதிலே தாங்க உறுதி பிறக்க, அந்த உறுதி சிந்தனையைத் தூண்டுகிறது; வாழ்க்கை எளிதாகிறது. அரிய கருத்து.