பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭵ Ꮌ8

நாவல் ஆரம்பத்தில், கதையின் வளர்ச்சிக்கேற்ற கருத் தும், நாவல் தடுப்பகுதியில், அந்த அளவுக்கு வளர்ச்சியான கருத்தும், முடிவில் முழுமை பெற்ற கருத்தும் கோர்வையாக அமைந்திருப்பதை, வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

மனிதர்களின் சிறுமைகளையும், தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண் மலரப் போகின்றது" என்கிருன் அரவிந்தன். ஆம்; முதலில் தன் வாழ்க்கைத் துன்பங்களேயே ஊன்றுகோலாகக் கொண்டு, தன் வாழ்க் கைக்கு விடிவு கானும் பூரணி, பிறகு, பிறருடைய வாழ்க் கையில், மனிதப் பொது வாழ்வில் தோன்றும் இடர்களைக் கொண்டே சிந்தனையைச் செயல்படுத்தி சமூகத்திற்கே விடிவு கான விழைகிருள்.

சம்பவங்களைப் பற்றி நினைக்கும்போது, கதையில் தேக் கமும் இல்லை; தொடர முடியாத அளவுக்கு வேகமும் இல்லை. காலஅமைப்பும் சரிவர அமைந்துள்ளது. -

அடுத்தபடி தமிழ் நடையைப் பற்றிச் சொல்லும் போது, இந்த நாவலில் தமிழ்த்தாய், தன் பூரண அழகுடன் நிறைந்து விளையாடுவதைப் பார்க்கிருேம். ஆசிரியர் ஒவ் இவாரு அத்தியாயத்தின் ஆரம்பத்தில், ஒரு பாடல், தம் ம்ால் எழுதப் பெற்றவையும், பிறரால் எழுதப்பட்ட்வையும் எடுத்துக் கையாள்கிருர். இந்தப் பாடல்கள், கதைக்குப் பொருத்தமாக அமைவதோடு, வாசகர்களுக்கு இலக்கிய உணர்வையும் ஊட்டுகிறது. அதிலே உயிர்நாடியாக,

'பொன் காட்டும் நிறம் காட்டிப்

பூக்காட்டும் விழி காட்டிப் பண்காட்டும் மொழி காட்டிப்

பையவே நடை காட்டி மின்காட்டும் இடை காட்டி

முகில்காட்டும் குழல் காட்டி