பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 53

நன்பாட்டுப் பொருள் நயம்போல்

நகைக்கின்ருய், நகைக்கின்ருய்

பண்பாட்டுப் பெருமையெல்லாம்

பயன்காட்டி நகைக்கின்ருய்"

என்ற அரவிந்தனின் இந்த எளிய பாடல் பூரணியைப் பூரண மாகச் சித்தரிப்பதுடன், காதலர்களின் ஒரே மொழியாகத் தோன்றுகிறது.

விசேஷ அம்சம் என்று நோக்கும்போது, பூரணியின் புனித நினைவில், அவள் கை விளக்கோடு உயர, உயரச் சென்று கொண்டிருப்பதையும், அவளைச் சுற்றி அநுதாபத் துக்குரிய மக்கள் கூட்டம் இருப்பதையும் அவளே அரவிந்த னிடம் சொல்கிருள். அதைக் கேட்கின்ற அரவிந்தன், 'இதெல்லாம் உன் கற்பனை' என்று எள்ளி நகையாடவில்லை. அவள் உயர்வை உணர்ந்து, மற்ற ரோஜா மல்லிகை போன்ற தினமும் மலர்ந்து மறையும் மலர் அல்ல பூரணி: எட்டாத மலையில் மலரும் குறிஞ்சி மலர் அவள் என்று நினைத்து குறிப்பிலே பதிக்கும்போது, நம் உள்ளம் உருகு கிறது. -

முடிவு எதிர்பாராதது. கதாநாயகி பூரணியின் தூய வாழ்க்கை, அரவிந்தைேடு உள்ளத்தால் மட்டும் ஒன்று பட்டு, வாழ்ந்து, நிறைவு பெறுமாறு, அரவிந்தனை இயற்கை எய்தச் செய்கிருர் ஆசிரியர். மனித இயல்புக் கேற்ப, அந்தப் பகுதியை எழுதும்போது, ஆசிரியரும் கண் aர் சிந்தியிருப்பார். நாமும் கண்ணிருடன் முடிக் கிருேம்.

குறிஞ்சி மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை தானே மலருகிறது?

வாடியும், மணம் பரப்பும் மகிழ மலரைப் போன்ற சிற்றம்பலம். எட்டாத மலையிலே, மலர்ந்து நிற்கும்

நா-10 .