பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹெப்ஸிபா ஜேசுதாசனின்

புத்தம் வீடு

சி. சு. செல்லப்பா

இன்று தமிழ் இலக்கியத்தில் சிறுகதை போல் இல்லாமல் நாவல் வளர்ந்து வருகிறது என்பது உண்மையே. வளர் கிறது என்கிறபோது தொகையளவில் மட்டும் இல்லை, தரத் திலும் கூடத்தான். இந்த நிலையில் நாவல்களை தரம் பிரிக் கிறபோது தலைசிறந்த நாவல், சிறந்த நாவல், நல்ல நாவல், சுமாரான நாவல் என்று ரகம் பிரிக்கத்தோன்றுகிறது எனக்கு. இந்த பாகுபாட்டின்படி பார்த்தால் தமிழில் சுமாரான நாவல்கள் என்று சொல்ல ஏதாவது கிடைத் தாலே பெரிய பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். மேலே சொன்ன தரப்பாகுபாடு பற்றி உதாரணம் காட்டிச் சொல் லப்போனல், இதுவரை தமிழில் வெளி வந்துள்ள நாவல் களில் தலைசிறந்தது மோ க மு ள்’. சிறந்தவைகளில் போய்த்தேவு நல்ல நாவல்களில் நாகம்மாள் இதய நாதம்' என்று ஒன்றிரண்டு உதாரணம் காட்டுவேன் •, சுமாரான நாவல்கள் என்று வருகிறபோதுகூட எனக்கு

அதிக சங்கடம் இல்லை. . .

எனக்கு - திருப்தி தருகிற சுமாரான நாவல்களே மிகக் குறைவு. உதாரணத்துக்கு மற்ற சிலதை சொல்வதைவிட