பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாண்டில்யனின் கன்னி மாடம்

ஆர்வி

"கன்னிமாடம் என்ற சரித்திர நாவலைப்பற்றிப் பேசுவதில் எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. காரணம், இதை எழுதிய ஆசிரியர் திரு. சாண்டில்யன் என் பெருமதிப் புக்குரிய நண்பர். கிட்டத்தட்ட கால் நூற்ருண்டுக் கால மாக நாங்கள் உண்மையான நேயத்தோடு பழகி வருகிருேம். இன்றுள்ள இந்தத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்று வதற்கு நாங்கள் இருவரும் மூலகாரணமாக இருந்தோம். இலக்கியத்தைச் செழிப்புள்ளதாகச் செய்யவும் இலக்கியா சிரியர்களின் நலன்களை ஆராய்ந்து பாதுகாக்கவும் இப்படி ஒரு சங்கம் பரந்த மனப்பான்மையுடன் அமைய வேண்டும் என்று நாங்கள் பல எழுத்தாளர்களே நேரில் சென்று சந் தித்து, முகவரிகளைச் சேகரித்து, கூட்டங்கள் போட்டு இந்தச் சங்கம் வலுவாக அமைவதற்கான விதிமுறைகளை வகுக்கும் பல பணிகளைச் செய்தோம். ... ." . . . . . . . .

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்ருல் எழுத்து, எழுத்தாளர் நலன் ஆகிய விஷயங்களில் எங்கள் லட்சியம் ஒரே மாதிரியாக இருந்து வந்திருக்கிறது என்பதைக் குறிப் பிடத்தான், நாவல் விழா என்று ஏற்படுத்தி, அதில் "