பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

żż

எழுத்தாளர்களுடைய படைப்புக்களைப் பற்றிப் பல எழுத் தாளர்கள் முன்னிலையில் பேசுவது என்ருல், அதைவிட மகிழ்ச்சிதரக்கூடியது வேறு என்ன இருக்கிறது? இந்த வாய்ப் புத் தந்ததற்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

'பொதுவாகச் சரித்திர நாவல்கள் பெரும்பாலும் சரித்திரக் குப்பைகளாகத்தான் இருக்கின்றன என்று மதிப்பு வாய்ந்த இலக்கியவாதி ஒருவர் ஒரு சமயம் குறிப் பிட்டார். அதில் சரித்திரமும் இல்லை; நாவலுக்குரிய அம்ச மும் இல்லை என்பதே அவருடைய குற்றச்சாட்டு. நான் அறிந்த வரையில் எழுத்தாளர்களில் பலருக்கும் இதே அபிப் பிராயம் இருக்கிறது. சரித்திர நாவல் என்கிற பெயரில் நம்முடைய நாட்டையும் அரசர்களையும் வைத்துக் கொண்டு, ஊர்களையும் பேர்களையும் வைத்துக்கொண்டு வேறு நாட்டுச் சரித்திர நவீனங்களின் சிதைவுகளே வெளி வருகின்றன என்று அந்த இலக்கியவாதி கருதுகிரு.ர். அலெக்சாண்டர் டுமாஸாம், ரெயில்ைட்ஸும், ஸ்காட்டும், ரபேல் சரிடினியும் எழுதிய பகுதிகளே சக்கையும் மொக்கையு மாக இவற்றில் கலந்திருக்கின்றன. நம்முடைய நாட்டின் உண்மையான சரித்திர நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஆதாரமாகக் கொண்ட நாவல்கள் மிகவும் அரிதாயிருக்கின் றின. நம்முடைய வரலாற்றுக் கால வாழ்க்கை முறைகள், பண்புகள், கலாசாரங்கள், சிந்த்னத் துறைகள், சமய உணர்ச்சிகள், சான்றுகள் கொண்ட கற்பனைகளை இந்த மாதிரியான நாவல்களில் காண முடிவதில்லை. வீரமும் தியாக உணர்ச்சிகளும் கேலிக் கூத்தாக வருகின்றன். நிகழ்ச் சிகளோ தெருக்கூத்துக் காட்சிகளாக அமைக்கப்பட்டிருக் கின்றன. பாத்திரங்களும் தெருக்கூத்துகளில் வரும் ராஜா ராணிகள்தான், அட்டைக் கத்தி வீரர்கள்தான். மக்குப் புலவர்கள், சிவனடியார்கள், ஆழ்வான்கள், யவனர்கள் இப் படிப்பட்டவர்கள் வராத நாவல்களே மிகவும் சொற்பம் தான். இங்கிலாந்தும் பிரான்சும் இங்கே தமிழ்நாடும் இலங்