பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名惠

கையுமாக வருகின்றன. அங்கே கார்டினல் ஒருவர் வந்தால் இங்கே சிவனடியார் ஒருவர் வருவார். காலம், இடம், பொருத்தம் பாராமல் நினைத்த இடங்களில் தோன்றுவார். அங்கே மாங்க் ஒருவர் வந்தால் இங்கே சாமியார் ஒருவர் வருவார். அங்கே சர்ச்சு வந்தால் இங்கே ஒரு புத்த விஹா ரம் வரும்; சமணப் பள்ளி வரும்; அல்லது காளி கோயிலா வது வரும். அங்கே நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நிகழ்ச்சி களே, தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த இடத்தில் நுழைக் கலாம் என்றுதான் பெரும்பாலான ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றனவோ என்றுகூடத் தோன்றும். செப்பேடுகளே யும் சிலர் சாஸனங்களையும் பட்டயங்களையும் பொருத்து வதற்கு வாய்ப்பாக, உடுக்குறியிட்டு, சரித்திர ஆராய்ச்சிப் புலமையைக் காட்ட வசதியாகப் பாண்டியர் காலம் தேவ ஆலயா, பிற்காலச் சோழர் காலம் தேவலேயா, இருண்ட காலம் என்று போட்டுவிட்டால் அது எத்தனை பொருத்த மாக இருக்கும் என்ற ஆராய்ச்சிகளே இங்கே பெரும் பாலான நாவல்களுக்குத் தேவையாக இருக்கின்றன. ராஜாக்களே உருவாக்குவது மிகவும் சுலபமானதாகி விட் டது. வெறும் சோதாக்களாக அவர்கள், கண்ட நேரத்தில், கண்ட இடத்தில், கண்ட காரியத்துக்கெல்லாம் போகி முர்கள். அப்புறம் அவர்களே அரியணையிலும் வந்து உட் கார்ந்து, அரியணைக்கு ஏற்காத வறட்டுப் பெருமைகளையும் புனை சுருட்டுக்களையும் தேர்தல் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசுகிருர்கள். - - -

இதெல்லாம் அந்த இலக்கியவாதி கூறுகிற வாதம். அவருடைய கூற்றை ஏற்றுப் பேசவோ மறுத்துப் பேசவோ நான் இங்கே வரவில்லை. கன்னி மாடம் என்ற சரித்திர நாவலைப் பற்றிப் பேசுவது ஒன்றுதான் என் வேலை, -

கன்னி மாடம் என்ற இந்த நாவல் பிரபலமான தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் தொடர்கதையாக வெளிவந்ததை நாம் அறிவோம். லட்சக் கணக்கான வாசகர்கள் இதைப் படித் துப் பெரிதும் ரசித்திருக்கிரு.ர்கள். இந்த நாவலே எழுதிய