பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4

ஆசிரியரை நேரில் பார்க்க வேண்டும் என்று துடித்தவர்கள் பலர் உண்டு. நானே பார்த்திருக்கிறேன். இவரா சாண் டில்யன்? என்று ஓடோடி வந்து பார்த்துவிட்டுத் திகைத் தவர்கள் எத்தனையோ பேர். அவ்வளவு பிரபலமடைந் துள்ள சாண்டில்யனுடைய இந்த நாவலை நான் விமர்சனம் செய்ய வருவது சற்றுப் பொருந்தாதோ என்று முதலில் பயந்தேன். -

- இலக்கியத்தில் குற்றம் குறைகளே அடுக்கிச் சொல்வது மட்டும் விமரிசனம் ஆகாது. அதன் நிறைவுகளையும் சிறப் புக்களையும் மனம்விட்டுப் பார்த்துத் தெரியவைப்பதும் விம ரிசனத்தின் நோக்கமாகும், ரஸாதுபவம்தான் முக்கியம். Enjoyment என்கிருேமே அது. இன்பம் துய்ப்பதற்காகத் தான் இலக்கியம் படிக்கிருேம். குற்றம் குறை கண்டு பிடிப் பதற்காக மட்டும் நாவலேப் படிப்பது கூடவே கூடாது. நாவலில் என்ன, நாவலின் மூலப் பதிப்பான வாழ்க்கையில் கூடத்தான் எத்தனையோ குற்றம் குறைகள்.

எழுத்தாளன் பெரிதும் கற்பனை உலகில் சஞ்சரிப்பவன். இளகிய மனம் படைத்தவன். எதிலும் சட்டென்று வசப் பட்டு ஈடுபட்டு விடுவான். அவனுக்குச் சில பலவீனங்கள், சபலங்கள் வேறு உண்டு. ஆனல் எழுத்து என்று வருகிற போது அவன் தன் சிறுமைகளையோ பலவீனத்தையோ கூட விட்டு வைக்காமல், மனித சமுதாயத்தின் நலனுக்காகப் பணயம் வைத்துப் பலியிட்டுவிடத் தயங்கமாட்டான். அவ லுடைய கலையுணர்வு இந்தச் சிறுமைகளை விலகி நின்று பார்த்து, உண்மை அழகும் வண்ணமும் பயனும் விளக்க வல்ல ஒரு கலைப் பொருளாக மாற்றத் தயங்குவதில்லை.

இந்த உண்மையை நம்முடைய தமிழ்நாட்டு விமரிசகர் களில் சிலர் மறந்து விடுகிருர்கள். சிலருக்கு இந்த உண்மை படுவதேயில்லை. படைப்பு இலக்கியம் செய்து தோற்றுப் போய் விமரிசனம் செய்ய வருகிறவர்களுடைய உள்ளத்தில் பரிவும் சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பார்க்கிற பக்குவமும்