பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱属

இருப்பதற்கில்லை. கசப்பும் எரிச்சலுமே உள்ளத்தில் நிறைந்தவர்களுக்கு ரஸா நுபவத்துக்குத்தான் முதலிடம் என்ருல் ஏருது.

ஆகவே கன்னி மாடத்தின் வெற்றிக்கு அல்லது, நாவல் என்ற அளவில் அதற்குரிய மதிப்புக்கு, இடத்துக்கு, அதை ஆசிரியர் எப்படி உருவாக்கியிருக்கிருர் என்று பார்க்கவே முதலில் நான் விரும்புகிறேன்.

கி.பி. பன்னிரண்டாவது நூற்ருண்டின் பிற்பகுதியில், ஈழமும் சோழவள நாடும் பாண்டிய நாட்டின் அரசியலில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைந்திருக்கிறது கதை. --

அப்போது பாண்டிய நாடு இரண்டாகப் பிரிந்து நின் றது. குலசேகரப் பாண்டியன் என்பவன் நெல்லையிலும் பராக்கிரம பாண்டியன் என்பவன் மதுரையிலுமாக அரசு புரிந்து வந்தார்கள். இருவரும் தாயாதிகள். இவர்களுக் குள் மனஸ்தாபம் ஏற்படவே, குலசேகரன், பராக்கிரம பாண்டியன்மீது படையெடுத்து வந்தான். பெயர்தான் பராக்கிரம பாண்டியனே ஒழிய, அவன் உதவிக்கு ஈழத்து அரசனை அழைத்தான். ஈழத்து அரசனை பராக்கிரம பாகு இலங்காபுரத் தண்டநாயகன் தலைமையில் ஒரு பெரும் படையை மதுரைக்கு அனுப்பி வைத்தான். அதற்குள் பராக்கிரம பாண்டியன் தலே போய்விட்டது. ஆனல் அவன் மகன் வீர பாண்டியனை அரியணையில் அமர்த்தி விடுகிருன் அந்த இலங்காபுரத் தண்ட நாயகன். குல சேகரன் மதுரையைவிட்டு ஓடிவிட்டான். வீர பாண்டியன் இலங்காபுரத் தண்ட நாயகனுக்குக் கைப் பொம்மையாக விளங்குகிருன். இலங்காபுரன் பாண்டிய நாட்டச் சிங்க ளத்தின் ஒரு பகுதியாக்கிவிடத் திட்டம் போட்டு, சிங்கள நாணயத்தைப் புகுத்தி, பல வகையிலும் தமிழர்களை ஓங்க விடாதபடி செய்து வந்தான். இதற்கு இலங்காபுர னுடைய தங்கை மகள் மாதவி என்னும் பெண் உதவியாக

நா-2