பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 26

இருக்கிருள். அந்தச் சிங்களத்துப் பைங்கிளி இளம் அரசன் வீர பாண்டியனை மயக்கும் விழிகளாலும் மொழிகளாலும் கோழையாக ஆட்டி வைக்கிருள்.

குலசேகரப் பாண்டியன் சோழ அரசனுடைய உதவியை நாடினன். தமிழ் நாட்டில் வேரூன்றிவரும் சிங்களத்துச் செல்வாக்கை ஒடுக்க, பேரமைச்சர் பல்லவராயர் வருகிரு.ர். அவர் கிழவர். மகா பெரிய ராஜதந்திரி. அவர் பாண்டிய எல்லையைக் கவனித்து வருகிருர், அந்த எல்லையில் மழவ ராயன் என்ற சிற்றரசனையும் அவனுக்கு ஒரு சிற்றரசையும் நிறுவியிருந்தான் இலங்காபுரன், இந்த மழவராயனத் தன் பக்கம் இழுத்துக்கொள்ள, குலசேகரன் முயன்று வந் தான். அந்தக் கிழவர் அதாவது சோழப் பேரமைச்சர் தமிழ் நாட்டில் சிங்களத்துப் பலத்தை ஒடுக்க இவர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளத் தயாராக இருந்தார். இதற்கு நடுவே பாண்டியனுடைய சேதிைபதியான அபரா ஜிதனுக்கும் மழவராயன் மகள் கார்குழலிக்கும் சந்திப்பு நிகழ்ந்து அது அன்பாக வளர்கிறது. பாண்டிய சேனதிபதி தன்னுடைய இணையற்ற வீரத்தாலும் மக்களுடைய ஆதர வாலும் இலங்காபுரனத் தடுத்து அவனுக்கு உதவியாக ஈழத்திலிருந்து வந்த மற்ருெரு தண்ட நாயகனான ஜகத் விஜயனேயும் சிறைப் பிடித்து, பாண்டிய அரசைக் குலசேகர பாண்டியனிடமே ஒப்படைக்க உதவுகிருன். சோழப் பேரமைச்சர் இந்தச் சமயம் பார்த்து உள்ளே புகுந்தவர் தம் முடைய பெரும் படையை, பாண்டிய நாட்டைக் கண் காணிக்க அங்கே நிறுத்தி வைத்து விடுகிருர், சிங்களத்துப் பலம் அழிந்து, சோழருடைய ஆதிக்கத்தில் பாண்டிய அரசு நடக்கிறது. அபராஜிதனுக்கும் கார்குழலிக்கும் கல்யாணம் நடக்கிறது. இந்தச் சண்டையின் பயனக அவள் அடைந்த பயன் தந்தையை இழந்ததும் சிற்றரசுப் பதவியை இழந்த தும்தான். இவ்வளவுதான் கதை. அபராஜிதன், கார் குழலி, மாதவி, அடிகளார். இவர்கள் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். மற்றவர்கள் பெயர்கள் சரித்திரத்தில் காணப்