பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

படுகிறவை. சரித்திரத்தில் இப்படி ஒரு கற்பனையை ஒட்டி, கதையை நிகழ்த்தியிருக்கிருர் ஆசிரியர்.

இதை 62 அத்தியாயங்களாக, 615 பக்கங்கள் வரும்படி யாக எழுதி வெற்றி கண்டிருக்கிருர் சாண்டில்யன். 62 அத் தியாயங்களை 61 திகைப்பூட்டும் காட்சியோடு முடித்திருக் கிற சாமர்த்தியம் இருக்கிறதே அதை எப்படி மெச்சுவது என்று எனக்குத் தெரியவில்லை.

சரித்திர நாவல்களை இத்தனை லட்சம் பேர் படித்துவிட் டார்கள் என்று சொல்லி மதிப்பிட வந்தால் அதன் உண்மை யான தகுதியை அளந்து விட்டதாகாது. சரித்திர நாவல்கள் பெரும்பாலும் பத்திரிகைகளின் தேவையை முன்னிட்டுத் தான் தொடர்கதைகளாக எழுதப் படுகின்றன. தொடர் கதைகள்தான் பத்திரிகைகளின் ஜீவநாடி. இலக்கியத்தை மன உல்லாசத்துக்காகவும் ஆனந்தத்துக்காகவும் இலக்கிய இன்பத்தில் காணும் அமைதிக்காகவும் படிக்கிறவர்கள் தொகை மிகவும் சொற்பம். குத்து, கொலை, காதல் ஏமாற் றம், நடிக நடிகைகளின் அந்தரங்க விவகாரங்கள் ஆகிய வற்றை அக்கப்போராகப் படித்துப் பொழுது போக்க விரும் புகிறவர்களுக்கு மனவெழுச்சி, கிளர்ச்சி, திகைப்பு இவை தான் தேவையானவை. - .

இலக்கிய அருவியில் திளேக்கச் செய்து இதமான இன்பத்தை வழங்கவல்ல கதைப் பகுதிகள்கூட தொடர் கதையாக வரும்போது வேறு உருக்கொண்டு விடுகின்றன.

தொடர் கதையாகப் படித்துக்கொண்டு வருகிற வாச கர்கள், கொண்டா கொண்டா, அடுத்த வாரம் எப்போது வரப்போகிறது? கொண்டுவா பத்திரிகையை என்று எதிர்பார்க்கும் ஆவலே உண்டாக்கி, ஒவ்வொரு அத்தி யாயத்தையும் முடித்திருக்கிருர் ஆசிரியர், வாசகர்களின் வெறியை வாரா வாரம் திருப்திப்படுத்தி யாகவேண்டிய அவசியம் இவரை அப்படிப் பிடித்துக்கொண்டு விட்டதோ, என்னவோ !