பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவலே எழுப்புகிற இந்த உத்தியும் பாணியும் எல் லாருக்குமே பலித்துவிடுவதில்லை. எத்தனையோ சரித்திர நாவலாசிரியர்கள் இந்த உத்தியைக் கையாள முடியாமல் பல்டியடித்திருக்கிருர்கள். அவர்கள் ஏற்படுத்த நினைத்த ஆவலுக்குப் பதில் ஆத்திரத்தைக் கொடுத்து, நாவலேயே போர் என்று தூக்கிப் போட்டுவிட்டுப் போகும்படி விழுந்திருக்கிருர்கள். ஆனால், சாண்டில்யன் அப்படி அலுத் துப் போகும்படி இந்த உத்தியை நவிய விடாமல், வாரா வாரம் ஆவல் தீனி போடுகிற வேலையைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிருர், வெற்றியும் கண்டிருக்கிருர்.

காரணம் அவர் கதையை நேராகத் தொடங்கி நேராகச் சொல்லிக்கொண்டு போவதுதான் என்று நான் நினைக்கிறேன். உத்திகளில் சிறந்தது நேராகச் சொல்லிக் கொண்டு போவதுதான். Straight Telling என்கிருர்களே, அது ஒன்றும் அத்தனை எளிதான வேலையல்ல. பிளாஷ் பாக்கையோ அல்லது பாத்திரங்களே கதை சொல்வது போன்ற உத்திகளையோ பாணியையோ கொண்டு கதையை எ ளிதாக நடத்திக்கொண்டு போய்விட லாம். ஆனல் முன்ல்ை நிகழ்ந்தது, பின்னல் நிகழ்ந் தது என்று குழப்பாமல் கதையைத் தொடங்கியது முதல் நேராகச் சொல்லிக் கொண்டு போவதுதான் கடினம். வாசகர்களைக் கதை வலு இல்லாமல் தொடர்ந்து படிக்கச் செய்ய முடியாது. நேராகச் சொல்கிற பாணியில் மேலே மேலே நிகழ்ச்சிகளும் காட்சிகளும் வந்துகொண்டேயிருக்க வேண்டும். அப்படி இவர் ஏதோ ஒன்றைச் சொல்லி, வாசகர்களைக் கவர்ந்து விடுகிரு.ர். . .

. . சாண்டில்யன் கதையைச் சொல்லச் சரித்திர ஆதாரங் களே எந்த இடத்திலும் அதிகமாக எதிர்பார்க்கவில்லை. சிங்களத்துத் தண்டநாயகர்கள் தலையோடு அவர்கள் செல்வாக்கு அழிந்து, பாண்டியன் அரசு கட்டில் ஏறியதும் சோழர்கள் மேலாதிக்கம் பாண்டிய நாட்டில் தோன்றியதும் தான் சரித்திர நிகழ்ச்சி. அதைச் சுற்றி முழுக்க முழுக்கக்