பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

கற்பனையான நிகழ்ச்சிகளை உருவாக்கி, கற்பனைப் பாத்திரங் களைப் படைத்து. கதையைப் பின்னிக்கொண்டு செல்வது அவருடைய திறமையைக் காட்டுகிறது. அந்தச் சரித்திர உண்மையை ஒட்டி ஒரு கற்பனைக் கதை. சரித்திரம் வெறும் எலும்பு என்ருல் சரித்திர நாவல் அதற்குச் சதையும் ரத்தமும் போல. மழவராயன் மகள் ஒரு கன்னிமாடத்தில் வசிக்கிருள். அதனுலேயே ஆசிரியர் இந்த நாவலுக்கு அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிரு.ர்.

எதையும் கவர்ச்சியாகக் காட்டுவதில் ஆசிரியர் விழிப் போடு இருப்பதை வாசகர்கள் காணலாம். அந்தக் கவர்ச்சி யில் மயங்கும் வாசகர்களுக்குக் குற்றம் குறைகளை நின்று நிதானித்துப் பார்க்க நேரம் இல்லை. ஒவ்வோர் அத்தி யாயத்தின் முடிவிலும் உள்ள திருப்பம் அவர்களைத் திகைக்க வைத்து அவர்களுடைய கவனத்தை யெல்லாம் வேறு எங்கேயோ இழுத்துச் சென்று விடுகிறது.

12-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் தமிழ் நாட்டு மக்களின் நிலை என்ன, அவர்களுடைய வாழ்க்கையும் குறிக்கோளும் என்ன, அவர்களுடைய உணர்ச்சிகள், சிந்தனைகள், நாகரிகம் எல்லாம் எப்படி இருந்தன, அந்தச் சமுதாயத்தில் தோன்றிய அல்லது எதிர்ப்பட்ட பிரச்னை கள் எவை, எதிர்காலச் சமுதாயத்தை எப்படி அவை பாதித்தன என்றெல்லாம் நின்று பார்க்க அவசியமே இல்லாதபடி கதை நிகழ்ச்சிகளே உருவாக்கி அதைத் தொடர்ந்தே வாசகர்களை அழைத்துச் சென்று விடுகிறது நவீனம், . . ; -

கதையின் காட்சிகளையும் ஆசிரியர் வண்ண எழிலோடு உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிருர், உதாரண மாக வங்கார முத்தரையனுடைய தலையையும் நிஷதராச் னுடைய தலையையும் நீதி விசாரணையின்றிக் கொய்து, கழுகுகள் கொத்தித் தின்னும்படி கம்புத்திலே கோட்டை வாசலில் செருகி வைத்திருந்த காட்சியைச் சொல்லலாம்.