பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

粤份

இன்னொரு இடம் மேலேமங்கலத்து எல்லையில் இலங்கா புரனைக் கூடாரத்தில் அபராஜிதன் சந்தித்த காட்சியைச் சொல்லலாம். அபராஜிதன் நாடு கடத்தப்பட்ட உத்தர வோடு தன் மஞ்சத்தில் படுத்திருக்கும் நேரத்தில், அவ னுடன் சரசமாடி அரசியல் நோக்கத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வருகிற மாதவியின் கோலத்தைச் சொல்லலாம். இப்படி இன்னும் சில காட்சிகளை ஆசிரியர் உருவாக்கிக் காட்டியிருப்பது வாசகர்களைப் பெரிதும் கவரக்கூடிய அம்ச மாகும். சிவனடியார் ஒருவரை, கோழையான வீர பாண்டியன் கிட்டிகட்டச் செய்து, அவர் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கிற இடம்கூட வாசகர்களைப் பிர மிக்க வைக்கிற கட்டம்தான். - - -

உண்மைபோல ஆசிரியர் கதாபாத்திரங்களின் உள்ளங் களிலே தோன்றும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சொல்லிச் சென்று, அவற்றை வாசகர்கள் நம்பும்படி செய்ய முனைகிருரே, அதில்தான் அவருக்குள்ள சாமர்த்தியம் இருக்கிறது. - - பார்க்கப் போனல் சாதாரண கதை. இலக்கியச் செறிவோ, பண்புகளோ, பயனே இல்லாத உருவம். ஆயி னும் எழிலும் வண்ணமும் கலந்து ஒரு முழுமையை உண்டாக்கியிருக்கிருர் சாண்டில்யன்.

பொழுது போக்குக்காகத்தான் இலக்கியம். என்ருலும் அது அத்துடன் நின்றுவிடுவதில்லை. மனித குலம் பழமை யின் அனுபவங்களுக்குமேல் ஒரு புதுமையை, நன்மை பயக்கும் முன்னேற்றத்தை உருவாக்க உதவுகிறது இலக் கியம். புதிய சமுதாயத்தை உருவாக்கச் சரித்திர நாவல் கள் நமக்கு அறிவுக் கருவூலங்களை வழங்கவேண்டும். நேற்றிலிருந்து இன்று தோன்றிய நாம் நாளை இருப்பதற் கான அஸ்திவாரத்தை அமைக்க உதவுகிறது சரித்திர நாவல். ஆளுல் இந்த நோக்கம் இப்பொழுது வெளிவருகிற சரித்திர நவீனங்களின் மூலம் ஈடேறுகிறதா என்பதே