பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& I

கேள்வி. நாம் மீண்டும் அந்தப் பழங்காலத்துக்குச் செல்ல விழைகிருேமா, அந்தக் காலத்து முடியரசர் வாழ்வை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிருேமா, அந்தக் காலத்து அரசியல், சமயம், கலே, இலக்கியம், போர்முறை ஆகிய துறைகளே மீண்டும் புதுப்பிக்க விரும்புகிருேமா? இதுதான் இப்பொழுது எழுகிற கேள்வி.

வாசகர்கள் பெருகுவதற்கும் நிலைப்பதற்கும் பத்திரிகை களுக்கு விறுவிறுப்பான தொடர் கதைகள் தேவைப் படுகின்றன. வாசகர்களின் ஆவலைத் துரண்டிக் கிளறி விட்டு, வளர்க்கும் தொடர் கதைகள் தேவையாயிருக் கின்றன என்று சொன்னல் அதைப் புரிந்துகொள்ள முடி கிறது. ஆனால், சரித்திர நாவலுக்குள்ள பெருமைகள் அனைத்தையும் இவற்றுக்கு வழங்கி, எழுதியவர்களைப் பேராசிரியர்களாகக் கொண்டாடிப் போற்றி, மற்ற இலக்கிய முயற்சிகளே மட்டம் தட்டும் அளவுக்கு உற்சாகம் காட்டுகிற நிலை வருகிறபோதுதான் நமக்குச் சில உண்மை கள் புதிர்களாகி விடுகின்றன. -

சாண்டில்யன் என்றுமே அடக்கமானவர். யாருடைய சரித்திர நவீனமும் இவரளவுக்கு வாசகர்களைக் கொள்ள வில்லை என்று சொல்லிவிடலாம். மூன்றரை லட்சம் குடும் பங்களுக்கு இவர் எழுதும் தொடர்கதை செல்கிறது. எத்தனை லட்சம் பேர் அதைப் படிப்பார்களோ? அத்தக் கணக்கெல்லாம் போடுவதற்காக நான் இங்கே வரவில்லை. ஆளுல், அந்த திலையிலும் ஒரு சமுதாயப் புரட்சி பண்ணத் தகுந்த நாவல் என்ருே, ஒரு சமுதாயச் சரித்திரத்தை உருவாக்கிக் காட்டி அதிலிருந்து பெறும் படிப்பினைகளைக் கொண்டு வருங்கால சமுதாயத்துக்கு உரம்போட்டு வளப்ப் மாக்கும் நவீனம் என்றே அவர் மார்தட்டிக்கொள்ளவில்லை என்று நினைத்தே இதைக் குறிப்பிடுகிறேன்.

இன்று நாம் ஆகா-ஒ'கோ' . என்று கிணற்றுத் தவன் களைப்போல மார்தட்டிப் பெருமை பேசுகின்ற சில நாவல்