பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母星

களே இன்னெரு மொழியில், குறிப்பாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பார்த்தால், அப்போது தெரியும் அவற்றின் வண்டவாளங்கள். கன்னிமாடத்துக்கு அந்தப் பயமெல்லாம் இல்லை. ஆயினும் கன்னிமாடத்தைத் தனிப் பெறும் வரலாற்று நவீனம் என்று அழைக்க நான் விரும்ப வில்லை. ஆசிரியர் எப்படி நினைப்பாரோ எனக்குத் தெரி யாது. இந்த வரலாற்றுப் பாசனத்தினல் கலையோ, பண்பு களோ, அறிவோ, ஆற்றலோ பாய்ந்து நாடும் குலமும் செழித்துவிடும் என்று நான் வாதிட வரவில்லை; நம்பவும் இல்லை. மனித சமுதாயம் செம்மைப் பட்டு, முன்னேறி விந்தை செய்யும் என்ருே, உலகில் ஆனந்தமும் அமைதியும் நிலவச் செய்ய உதவும் என்ருே நான் கூற வரவும் இல்லை. பொழுது போக்கு, சமுதாயத்தின் தேவை. அதை முற்றி லும் வெற்றிகரமாக வழங்குகிறது இந்தக் கன்னிமாடம் என்றுதான் நான் கருதுகிறேன்.

கடைசியாக இந்த நாவலில் ஆசிரியர் கையாண்டி ருக்கும் நடையைப் பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியம்.

இவருக்கு ஒரு தனி நடை. மிகமிக நீளமான வாக்கிய அமைப்பு. இவ்வளவு நீளமான வாக்கியத்தை வாசகர்கள் புரிந்துகொண்டு ரசிக்கிருர்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. புதுமை சேராத பாணியில் பழங்கால நடை யில் எழுதியே இவர் லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந் திருக்கிருர் என்ருல், அதில் இவர் புதுமையைப் புகுத்தி, மறுமலர்ச்சித் தமிழை வித்தையாகக் கையாண்டால் ஏது, இவர் எல்லாரையுமே பைத்தியமாக அடித்துவிடுவார் என்று தான் தோன்றுகிறது. அதனல்தானே என்னவோ ஆண்டவ கைப் பார்த்து இவரைப் பழைய பாணியிலேயே செல்ல விட்டிருக்கிருர் போலிருக்கிறது ! - *

வர்ணனைகள், உரையாடல்கள், எல்லாவற்றிலும் புதுமை மணம் வீசாவிட்டாலும், பழகின அரிசி சோறு