பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

வடிக்கச் சுகமாகவும் வாய்க்குச் சுவையாகவும் இருப்பது போல அமைந்திருக்கின்றன.

இலக்கியத்திலே சுவைதான் முக்கியம். ஒன்பது விதச் சுவைகளிலே சிருங்காரச் சுவை தலைமையானது. சிருங்காரம் என்றதுமே முகத்தைச் களித்துக்கொள்கிற ஆசார சீலர்கள் இருக்கிருர்கள். அவர்களுக்காக நாவல் எழுதப்படுவதில்லை. அவர்கள் நாவல்களைப் படிக்க வராமல் இருப்பதே நல்லது. பாராயண நூல்கள் இருக்கின்றன. படிக்கட்டும். சில முற்போக்குவாதிகளும் இப்படித்தான். நாவல் எல்லாம் கொள்கை விளக்கங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். காதலோ சிருங்காரமோ இல்லாமல் வெறும் வறட்டு வாழ்க்கை என்ன வேண்டிக் கிடக்கிறது? முற்போக்குவாதி பிள்ளை பெருமலா இருக்கிருன்? ஆசார சிலர்கள், மகான்கள் பிள்ளைப் பேறு இல்லாமலா இருக் கிரு.ர்கள்?

நாவல் படிக்கிறவர்களுக்கு விரசம் கலக்காத வரையில் சிருங்காரச் சுவையில் வெறுப்பு ஏற்பட நியாயமில்லை. ஆனல், எதுவும் அளவுக்கு மிஞ்சில்ைதான் தொல்லை. சிருங்காரச் சுவை இந்த நாவலிலே கொஞ்சம் தூக்கலாகத் தான் இருக்கிறது. அதற்கு என்ன செய்ய? சிலருக்கு எதிலுமே கொஞ்சம் உப்புத் தூக்கலாக இருக்க வேண்டி யிருக்கிறதே ! . . . .

கன்னிமாடம் பொதுவாக ஆசிரியருக்கு ஒரு வெற்றி

யைத் தான் அளித்திருக்கிறது. வாசகர்களுக்கு அருமை யான பொழுது போக்கை வழங்கியிருக்கிறது. - - -