பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்கிரமனின்

நந்திபுரத்து நாயகி

பிருந்தா வரதராஜன்

பொற்காலம் என்று கருதப்படும் மூவேந்தர்களது ஆட்சிக் காலத்தை யொட்டிய இலக்கியத்தை இதயம் ஒன்றிப் படிக்க வேண்டும், இன்புற வேண்டும் என்று எண் னினல், அம்மன்னர்கள் அரசோச்சிய நாட்டைப் பற்றியும், குறிப்பிட்ட இலக்கியம் தோன்ற ஏதுவாயிருந்த அந்நாட்டு மக்களைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இன்று நாமறியும் தமிழ் நாடு. அதனின்று முற்றிலும் வேறு பட்டதே. அன்றுபோல் போரடிக்க யானையைத் தேட வில்லை, இன்று. வயலில் வந்த வெம்புலியை விரட்ட முறத்தை வீச நினைக்கவும் மாட்டாள், இன்றைய தமிழ்ப் பெண். தர்மமும், தானமும், பக்தியும் தழைத் தோங்கிய நாடு, அன்று.

சரித்திர இலக்கியத்தைச் சுவை மிக்க இலக்கியம் என்று வழி காட்டியவர்பூ கல்கி அவர்கள். பள்ளியிலும் கல்லூரி யிலும் படிக்கும்போது அச்சுப் பிரதியில் ஓசை நயங்கொண்ட வெறும் பெயர்களாகவே தோன்றியதை, உயிரும் உணர்வும் கொண்ட மனிதர்களாக, ஆசாபாசங்களும், காதலும், வீரமும் வீரவிக்கிடந்த வாழ்க்கை நடத்தியவர்களாக, தனது திறமை எனும் மந்திரக்கோலால் நம்முன் நிறுத்தியவர் அவர். . . . . . . . . . - -