பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

st

புத்தகம் ஒன்றைப் படித்ததும், ஆத்ம திருப்தியுடன், 'ஆஹா என்ன இன்ப அனுபவம்' என்ற எண்ணம் ஏற்படு மால்ை, அதைவிட உயர்ந்த விமர்சனம் ஏது?

என்னைப் பொறுத்த வரையில் விமர்சிப்பது என்பது இலக்கியத்தில் அவரவர்க்கு ஏற்பட்ட தனிச் சுவையாகும். ஆசிரியர் அனுபவித்து எழுதியவைகளை இதயக் கசிவுடன் அகக்கண்ணுல் பார்த்து, பரவசமுற்று, அந்த அனுபவத் தைத் தான் மீண்டும் பெறுவதேயாகும். க வி ஞ னே ப் போலவும், கற்றுத் தேர்ந்த அறிஞன் போலவும், மனத் தளவில் சுற்றிவர, இலக்கிய உலகமே விமர்சகருக் குக் காத்திருக்கிறது. பழுதடைந்த கடிகாரத்தைப் பிரித்து, அக்கு வேறு ஆணி வேருக்கி, எங்கே எதில் தவறு என்று கண்டு பிடித்து மீண்டும் ஒக்கிடுவது போலன்று இலக்கிய நயம். மலரின் அமைப்பைத் தெரிந்து கொள்ள, இதழ் இதழாக நளினமுடன் பிரித்தால், ஒவ் வொரு பகுதியிலும் முழமையையும், அழகையும் காண லாம். ரோஜாவின் ஒவ்வொரு இதழும் ஒரு மலராகலாம். கவிதையின் ஒவ்வொரு சொல்லும் ஒரு ஸ்வரமாகலாம். நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒலிமயமான ராக ஸ்வரூபத்தின் அழகிய ஸ்வரக் கோவையாகலாம். தனி ஸ்வரமாகக் கேட்டாலும் தனித்தனி ஸ்வரக் கோவை களாகக் கேட்டாலும் முழுமையான ராக ஸ்வரூபத்தின் தேன் சிதறல்களே அவை என்ற அடிப்படை எண்ணம் மாறு. வதில்லை; சிதறுவதில்லை. இலக்கிய நயமும் அப்படியே. அணு அணுவாக ரளித்து, முழுவதையும் ரவிக்கலாம். -

(நாவலாசிரியரும், நாடக ஆசிரியரும் அண்மையிலுள்ள வர்களின் செயல்களையும், குண விசேஷங்களையும், உடனுக் குடனே உணர்ந்து, சீர்தூக்கி, எடைபோட்டு, வேண்டு மெனும்போது எடுத்துக் கொள்ளலாம் என்று பத்திரப் படுத்தக்கூடிய ஆற்றல் உடையவர்கள். எல்லோரிடையும் இந்த ஆற்றல் சம எடையுள்ளது, ஒரே தரமுள்ளது என்று